Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேரை இழுத்து தெருவுல விட்ருவாரு.. அமித்ஷாவிடம் பொங்கிய பன்னீர்செல்வம்! எடப்பாடிக்கு தான் பிரஷர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திடீரென நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை சந்திக்கக் கூடாது என அமித்ஷாவிடம் எடப்பாடி நேரடியாகவே வேண்டுகோள் வைத்த நிலையில் தற்போது ஓபிஎஸ் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமித்ஷா -ஓபிஎஸ் இடையே என்ன உரையாடல் நடந்தது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளன..

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக தனித்திருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவரது ஆதரவாளர்களும், அதிமுகவினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஏற்கனவே டிசம்பர் 15ஆம் தேதி ஒரு முக்கியமான அரசியல் அறிவிப்பை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்த ஓபிஎஸ், அதற்குள் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை தனியாக சென்று சந்தித்திருப்பது தற்போது அரசியல் களத்த்தில் பேசு பொருளாகியுள்ளது.

O PanneerSelvam Amit Shah edappadi palaniswami

2026 தேர்தல் அரசியல்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தன்னுடைய ஆட்சியை தொடரும் முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகிறது. அதே நேரத்தில் அதிமுகவும் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக கீழ்மட்ட நிர்வாகிகள் தொடங்கி மேல்மட்டம் வரை அமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. ஆனால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், எந்த தரப்பில் நிற்பார் என்பது மட்டும் தொடர்ந்து குழப்பமாகவே இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியையும் இழந்த ஓபிஎஸ், நீதிமன்றங்கள் வரை சென்று போராடியபோதும் எந்த வழியிலும் முன்னேற்றம் கிடைக்கவில்லை. இதனால் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கும் தோல்வியே கிட்டியது. அதன் பிறகு மீண்டும் பாஜக கூட்டணியில் தொடர்வார் என நினைத்தபோதும், அதிமுக-பாஜக கூட்டணி உருவானதால் ஓபிஎஸ் ஒதுக்கப்பட்டார்.

ஓபிஎஸ் அடுத்த முடிவு

இதனால் அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், நிபந்தனையில்லாமல் அதிமுகவில் இணைவதற்கும் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரை மீண்டும் சேர்க்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த மனோஜ் பாண்டியன் திடீரென திமுகவில் இணைந்தார். அதேபோல் செங்கோட்டையனும் அதிமுக பொறுப்பை தூக்கிப் போட்டுவிட்டு நடிகர் விஜய்யின் தவெகவில் சேர்ந்தார். தொடர்ச்சியான இந்த மாற்றங்கள் ஓபிஎஸை அதிகமாக தனிமைப்படுத்தியது.

ஓபிஎஸ் அமித்ஷா சந்திப்பு

இந்த நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி தன் கட்சி எதிர்காலத்துக்கான மிகப்பெரிய முடிவை அறிவிப்பேன் என்று அவர் தகவல் வெளியிட்டிருந்தார். அதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன் ஓபிஎஸ் கொச்சியில் யாருக்கும் தெரியாமல் சென்றது, அங்கிருந்து நேரடியாக டெல்லி புறப்பட்டதாக தகவல் வெளியானது. அவர் தனது புதிய கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதைவிட பெரிய அதிர்ச்சியாக, நேற்று இரவு ஓபிஎஸ் அமித்ஷாவை 20 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசியது மிகப்பெரிய்ச அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எடப்பாடிக்கு அழுத்தம்

இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், அதிமுக தற்போதைய தலைமையின் செயல்பாடுகள், எடப்பாடி பழனிசாமி காரணமாக கட்சி பலவீனமாகிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விஷயங்களை ஓபிஎஸ் அமித்ஷாவிடம் முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தான் தொடங்க உள்ள புதிய கட்சி பாஜக கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஆடிட்டர் குருமூர்த்தியும் பங்கேற்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கூட்டணி பேச்சு

"எடப்பாடியை மட்டும் நம்பி தேர்தலை சந்திப்பது தற்கொலைக்கு சமம்" என்பது ஓபிஎஸ் தரப்பில் இருந்து அமித் ஷாவின் சொல்லப்பட்டதாகவும்,, அதனால் தான் ஓபிஎஸ்முடிவு எடுப்பதற்கு முன் அவரை நேரில் சந்திக்க அமித்ஷா விரும்பினார் எனவும் ஓபிஎஸ் அணியினர் கூறுகின்றனர். அடுத்து ஓபிஎஸ் என்ன செய்வார்? பாஜக கூட்டணியில் புதிய கட்சி ஆரம்பித்து சேர்வாரா? அல்லது தவெகவில் இணைவாரா? என்பது தான் அரசியல் களத்தில் எழுந்துள்ள கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+