"உடனே டீம் அமைப்போம்".. திரட்டப்படும் காரணங்கள்.. புது "ரூட்டை" பிடித்த ஓபிஎஸ்.. பரபரப்பில் அதிமுக!
சென்னை: அதிமுகவில் எப்படியாவது தனக்கான வாய்ஸை நிலைநாட்ட வேண்டும் என்பதில் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறாராம்.. இதற்காக சிலர் முயற்சிகளை அவர் தீவிரமாக செய்து வருவதாக தெரிகிறது.
அதிமுகவில் தற்போது சசிகலா- இபிஎஸ் இடையே கடுமையான கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக சசிகலா இல்லை என்றாலும், எப்படியாவது கட்சிக்குள் வந்து, தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கடுமையாக முயன்று வருகிறார்.
முதலில் அரசல்புரசலாக சசிகலா வருகை குறித்த பேச்சுக்கள் நடந்த நிலையில், தற்போது சசிகலாவே வெளிப்படையாக அதிமுகவினரிடம் தனது வருகை குறித்து பேசி வருகிறார்.

பேச்சு
சசிகலா - இபிஎஸ் இடையிலான மோதல் கிட்டத்தட்ட வெளிப்படையாக அதிமுகவில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில்தான் தற்போது ஓபிஎஸ் அமைதியாக காய் நகர்த்தி வருவதாக செய்திகள் வருகின்றன. சசிகலா வருகைக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஓ பன்னீர்செல்வம் எதுவும் பேசவில்லை. ஆனால் சசிகலா கட்சிக்குள் வருவதை, ஒருவகையில் ஓபிஎஸ் ஆதரித்துக் கொண்டு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

ஆதரவா?
இபிஎஸ்ஸுக்குத்தான் கட்சியில் அதிக ஆதரவு இருக்கிறது. நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் என் பேச்சை யாரும் கேட்பது இல்லை என்று ஓபிஎஸ் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறாராம். ஏற்கனவே எதிர்கட்சித் தலைவர் போஸ்டிங் கிடைக்காத விரக்தியில் அவர் இருக்கிறார். இந்த நிலையில்தான் சசிகலா வந்தாலாவது கட்சியில் தனக்கு மரியாதை கிடைக்கும் என்று ஓபிஎஸ் நினைப்பதாக தகவல்கள் வருகின்றன.

டீம்
இப்படி உறுதிப்படாத பேச்சுக்கள் அடிபடும் நிலையில்தான், அதிமுக தோல்வி குறித்து ஆராய ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தில், அதிமுகவின் தோல்வியை ஆராய தனி குழு அமைக்கும் முடிவில் ஓபிஎஸ் இருக்கிறார் என்கிறார்கள். இந்த குழுவை வைத்து இபிஎஸ்ஸுக்கு எதிராக காய் நகரத்து ஓபிஎஸ் முயற்சி செய்வார் என்று பேசிக்கொள்கிறார்கள்.

முயற்சி
அதாவது அதிமுக தோல்விக்கு இபிஎஸ் எடுத்த நடவடிக்கைகள், கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகள், அவரின் தேர்தல் வாக்குறுதிகள் காரணம் என்று பழியை போடும் வகையில், தோல்வி குறித்து ஆராய குழு அமைக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார் என்று பேச்சு அடிபடுகிறது. சசிகலா ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கும் நிலையில் ஓபிஎஸ் ஒருபக்கம் தனது "டீம்" அமைக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.

கதை
இதனால்தான் இன்று நெல்லையில் இபிஎஸ்ஸுக்கு எதிராக போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. ஓபிஎஸ்ஸை ஆதரிக்காமல் முடிவு எடுக்க கூடாது என்று நெல்லையில் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களும் இதனால்தான் என்கிறார்கள். அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ் அறிவித்த வன்னியர் இடஒதுக்கீடு போன்ற விஷயங்கள் காரணம் என்று தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

நிர்வாகிகள்
இதனால்தான் கோபத்தில் உள்ள நிர்வாகிகள் இப்படி போஸ்டர் அடித்துள்ளதாக பேசப்படுகிறது. இதைத்தான் தனக்கு சாதகமாக ஓபிஎஸ் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அதிமுக தோல்விக்கான பொறுப்பை இபிஎஸ் தோளில் சுமத்த இருக்கிறார் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இதெல்லாம் நிஜமா.. உண்மையில் தோல்வியை ஆராயும் குழுவை ஓபிஎஸ் அமைப்பாரா என்பதெல்லாம் போக போகத்தான் தெரியும்.
-
சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்.. சின்னம்மா மெகா ஸ்கெட்ச்! தென்மாவட்டம் இருக்க, சென்னை ஏன்? யாருக்கு செக் -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications