வெற்றி துரைசாமி நதியில் மாயமானதும்.. ஓபி ரவீந்திரநாத் செய்த உதவி! வேதனையை பகிர்ந்த ஓபிஎஸ், சசிகலா
சென்னை: இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் மூழ்கி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்த நிலையில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளார்கள்.
இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் திரு. சைதை ளு. துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சசிகலா வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், “தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு.சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சட்லஜ் நதியில் விழுந்து காணாமல் போய் 8 நாட்களாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டார் என்றும், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
அன்பு சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எங்கள் இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபட்டவர். தனது மகனை இழந்த இந்த கடினமான நேரத்தில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியையும், மன வலிமையையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்து உள்ளார்.
அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் வெளியிட்டு உள்ள இரங்கலில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அண்ணன் திரு. சைதை எஸ்.துரைசாமி அவர்களின் மகனும், எனது நண்பருமான திரு.வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
நான் அவரை உயிருடன் விரைந்து மீட்பதற்காக இமாச்சல பிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் கின்னெளர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன். ஆனால், அவரை உயிருடன் காப்பற்ற இயலவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications