நாளை நமதே.. மீண்டும் சேரும் இரட்டை இலை! ஓபிஎஸ் உடன் பேசும் எடப்பாடி? இன்னும் 2 மாதத்தில் சுபமாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி எப்படி மீண்டும் உருவானதோ அதேபோல அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் என்ட்ரி கொடுப்பது உறுதி என்கின்றனர் ஓ.பன்னீர்செல்வத்தின் 'நெருங்கிய' ஆதரவாளர்கள். இது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் நேரடியாக இருவரும் சந்தித்து பேசுவார்கள் எனவும் அடித்துச் சொல்கின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு ஆண்டு இருக்கும் போது தற்போதில் இருந்தே தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து விட்டன. அதிமுக பாஜக இடையே கடுமையான மோதல் போக்கு இருந்த நிலையில் மாநில தலைமையில் மாற்றம் ஏற்பட்டது.

அதிமுகவை, அதன் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்த அண்ணாமலை பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட நிலையில் நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அது அதிமுகவுக்கான ஏற்பாடு தான் என சொல்லப்படுகிறது.

O Panneerselvam Sasikala AIADMK

இது ஒரு புறம் இருக்க திமுக தலைமை தனது கூட்டணியை 99 சதவீதம் உறுதி செய்து விட்டது என்றே கூறலாம். கடந்த 2018 மக்களவைத் தேர்தலில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக உள்ளிட்ட இன்னும் சில காட்சிகள் அடங்கிய கூட்டணியே தொடரும் என உறுதியாக சொல்கிறது.

அதிமுக தலைமையில் தான் கூட்டணி எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என அதிமுகவினர் கூறிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியா அல்லது கூட்டணியின் ஆட்சியா என்பது புரியாத புதிராக உள்ளது. இது தொடர்பாக இரண்டு நாட்களாக விவாதம் எழுந்து வருவது தனிக் கதை. இதற்கிடையே அதிமுக வாக்குகள் சிதறாமல் முழுமையாக சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவுக்கு வரவேண்டும் என கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

டிடிவி தினகரனை பொருத்தவரை தனியாக கட்சி ஆரம்பித்து விட்டார். அதிமுகவை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டேன் எனவும் அவரே கூறியிருந்தார். ஓபிஎஸ்ஸோ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து பாஜகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறார். இந்த நிலையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒரே மேடையில் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது. அது ஓபிஎஸ் அதிமுகவுடன் இணையும் நிகழ்வாக கூட இருக்கலாம் என்கின்றனர்.

பாஜக அதிமுக கூட்டணி அமையவே அமையாது என எடப்பாடி பழனிச்சாமி போர்க் கொடி தூக்கிய நிலையில் ஒரு சில முன்னாள் அமைச்சர்களின் நெருக்கடியால் மீண்டும் அவர் பாஜக கூட்டணியில் இணைந்து இருக்கிறார். அதைப்போலவே ஒரு குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு 'மேல்' இடத்தின் துணையும் இருப்பதால், இணைப்பு நிகழ்வு விரைவில் அரங்கேறும் என்கிறார் ஓபிஎஸ்-க்கு 'மிக மிக நெருக்கமான ஒரு முக்கிய புள்ளி' அவரிடம் பேசிய போது தான் மேற்கண்ட தகவல்கள் நமக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்-க்கு நெருங்கிய முக்கிய ஆதரவாளர்கள், ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி விட்டதாகவும், சில மாதங்களில் நேரடி சந்திப்பு நடக்கும் என்றும் கூறுகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவுக்குள் சில முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வு சாத்தியமே என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+