நான் முதல்வராக இருந்த போது ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தம்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஓபிஎஸ்
சென்னை: நான் முதல்வராக இருந்த போது சட்டத்திருத்தம் கொண்டு வந்து குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றோம் என ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும் விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி இறுதி விசாரணை நிறைவடைந்ததால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்றும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் எந்த தவறுமில்லை, தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தியளிக்கிறது. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தாமல் இருப்பதை ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். இந்த தீர்ப்பு கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் செல்லும் என கூறிய பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் முதல்வராக இருந்த போது சட்டத்திருத்தம் கொண்டு வந்து அதை குடியரசுத் தலைவரிடம் கொடுத்து ஒப்புதல் பெற்றோம். ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்த போது தமிழக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எனும் நமது உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழக மக்கள் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி கூறியதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என ஓபிஎஸ் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஓபிஎஸ் இருந்த போது ஜல்லிக்கட்டு குறித்து தமிழகத்தில் மெரினாவில் போராட்டம் வலுத்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், பொதுமக்கள் என திரண்டு வந்தனர். இந்த போராட்டத்தில் லாரன்ஸ், நடிகர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லாரன்ஸ் தொடர்ந்து இந்த போராட்டத்தில் இருந்தார். அது போல் விஜய் தொப்பி, முகமூடி அணிந்து கொண்டு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியாக சமூகவிரோதிகள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். பல இடங்களில் டயர்களை எரிக்கப்பட்டன.
அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து பதாகைகளை மெரினாவில் போராளிகள் ஏந்தியிருந்தனர். இந்த நிலையில்தான் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். மேலும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டம் கொண்டு வந்ததை அடுத்து உடனே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அன்று முதல் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கடந்த 6 ஆண்டுகளாக தை மாதம் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications