"காது கூசுதே".. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இப்படி பேசினாரா? முக்கிய "ஆதாரம்" சிக்கியதா? யாரந்த காயத்ரி
சென்னை: ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் மீது இளம்பெண் இன்றைய தினம் பாலியல் புகாரை தரப்போகிறார்.. அத்துடன், சென்னை டிஜிபி அலுவலகத்தில் முக்கிய ஆதாரத்தையும் ஒப்படைக்க போவதாக கூறியிருப்பதால் பரபரப்பு கிளம்பி உள்ளது.
பாஜகவின் நன்மதிப்பையும், மேலிட தலைவர்களின் நேரடி ஆதரவையும் பெற்றுள்ளவர் ரவீந்திரநாத். அதிமுகவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே ஒரு எம்பி என்ற பெருமையும் பெற்றவர்.

பாஜக ஆதரவாளர்: ஆனால், டெல்லியில் அவையில் பேசுவதை பார்த்தால், இவர் பாஜக எம்பியா? அல்லது அதிமுக எம்பியா? என்று குழம்பும் அளவுக்கு, பாஜகவுக்கு ஆதரவானவர் என்ற விமர்சனத்தையும் பரவலாக பெற்றவர். விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலிலும் சீட் பெற முனைப்பு காட்டி வருகிறார்.
கொடநாடு வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து, போராட்டத்தை எடுத்து வரும்நிலையில், ஓபிஎஸ் மகனிடமிருந்து பாலியல் குற்றச்சாட்டு வெடித்து கிளம்பி உள்ளது. இளம்பெண் காயத்ரி தேவி என்பவர் பாலியல் புகாரை கிளப்பி உள்ளார். கையில் புகார் மனுவுடன் சென்னை கமிஷனர் ஆபீசுக்கும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "மொத்த" விஷயத்தையுமே பகிரங்கப்படுத்தியிருந்தார்.
அண்ணன் மாதிரி: "என் பெயர் சிவகங்கை காயத்ரி தேவி.. என் குடும்பமும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குடும்பமும், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக குடும்ப நண்பர்களாக பழகி வருகிறோம். ஓபி ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி என்னுடைய தோழி அவரின் மூலமாக தான் ரவீந்திரநாத் குடும்பத்தோடு நட்பு ஏற்பட்டது. ரவீந்திரநாத்தை உடன்பிறவா சகோதரனாக எண்ணி நட்பாக பழகி வந்தோம்.
ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் (இயக்குனர் பாலாவின் மனைவி) ரவீந்திரநாத்துக்கு தகாத உறவு இருந்தது, இயக்குனர் பாலாவுடன் மலருக்கு விவாகரத்தும் ஆன நிலையில் எங்கள் நட்பு வட்டாரத்தில் பலருக்கும் இது மனக்கசப்பை ஏற்படுத்தியது.
ஆபாச அழைப்பு: இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு எனக்கு விவாகரத்தானது. அதன்பிறகு, 8 மாதங்களுக்கு முன்பாக ஓபி ரவீந்திரநாத்தின் நண்பர் என கூறிக்கொண்டு ஒரு நபர் என்னை தொடர்பு கொண்டு ரவீந்திரநாத் என் மீது ஆசைப்படுவதாகவும், அவருடன் பேசுங்கள் என்றும் கூறினார், அதுவும் ரவீந்திரநாத்தின் தொலைபேசி எண்ணில் இருந்து இந்த அழைப்பு வந்தது அதிர்ச்சி அளித்தது.
உடலுறவில் ஈடுபடலாம் என்று 20 முறைக்கு மேல் கேட்க எனது காது கூசியது. என்னை ராணி போல் அவர் பார்த்துக் கொள்வார் என்று ஆசை வார்த்தை கூறினார்.
ராணி மாதிரி: அதற்கு உடன்பட மறுத்த என்னை மேலும் ரவிந்தரநாத்துடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் அதற்கு உடன்பட மறுத்தால், எனது குடும்பத்தையும் மற்றும் என்னையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஆனந்தியிடம் சொன்னதும் அவர் தனது கணவரான ரவிந்தரநாத் அவர்களிடம் கேட்டபோது, யாராவது தனது கைபேசியை தவறாக பயன்படுத்தி இருப்பார்கள் என தெரிவித்ததாக கூறினார்.
எனவே நானும் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன். சிலகாலம் போன் ஏதும் வராமல் இருந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி மீண்டும் ரவீந்திரநாத்தின் தொலைபேசி எண்ணில் இருந்து இரவு 1 மணி வாக்கில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது, அரை மணி நேரம் நன்றாக பேசிய ரவீந்திரநாத் ஒரு கட்டத்திற்கு மேல் ஆபாசமாக பேசத் தொடங்கினார்.
ஆசை வார்த்தைகள்: பொறுமை இழந்த நான், நீங்கள் பேசுவது நல்லா இருக்கிறதா? நான் உங்களை அண்ணனாக பார்க்கிறேன் நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேட்டேன். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்து, சும்மா இப்படி எல்லாம் சொல்லாதே.. மலர் மாதிரி உன்னையும் நன்றாக வைத்து ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன் , வேண்டுமானால் கல்யாணம் கூட செய்து கொள்கிறேன் என்றெல்லாம் கூறினார் என்று குற்றம் சாட்டியவர்,
ஆண்கள் குடித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறதா குடித்தால் தாய்க்கும் தங்கைக்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதா. இதே போல் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஒரு எம்பி வீட்டின் பெண்ணிடம் பேச முடியுமா? அப்படி பேசினால் சும்மா விடுவார்களா? இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினேன், அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆனால் அவர் நண்பர்கள் இடத்தில் இருந்து மிரட்டல்கள் மட்டும் தொடர்ந்து வருகிறது.
போராட்டம்: இன்று எனக்கு நடப்பது நாளை என் மகளுக்கு நடக்கலாம், இதனால் இந்த விஷயத்தில் இதற்கு மேல் நான் பயப்படுவதாக இல்லை இதை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து கடந்த நவம்பர் (2021) மாதத்திலேயே ஓபிஎஸ் இடமும் கூறினேன் என்றார். ஆனால், ரவீந்திரநாத், அவரோட அம்மாவின் திதிக்கு கூட வரவில்லை இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவரிடம் நான் என்ன சொல்வது?" என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.. ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான், நேற்றைய தினம் இன்னொரு புகாருடன் டிஜிபி அலுவலகத்துக்கு வந்திருந்தார். ஆனால், டிஜிபியை சந்திக்க முடியவில்லை என்பதால், நாளை அதாவது இன்றைய தினம் வருமாறு சொல்லிவிட்டார்கள்.
ஆதாரத்துடன் புகார்: அதனால், இன்றைய தினம் மீண்டும் புகார் தருகிறார் காயத்ரி தேவி என்ற இளம்பெண்.. ரவீந்திரநாத் இரவு முழுவதும் தன்னை ஆபாசமாக அழைத்த வீடியோ கால்கள் ஆதாரங்களாக உள்ளதாகவும், அதையும் டிஜிபியிடம் புகாராக அளிக்க உள்ளதாகவும் இளம்பெண் கூறியிருந்த நிலையில், இந்த கேஸ் என்னவாக போகிறது? என்ற பரபரப்பு கிளம்பி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications