"ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் ஓபிஎஸ் ஆதரவு தேவை" இல்லன்னா கஷ்டம் தான்.. அடித்து சொல்லும் புள்ளி
சென்னை: ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்றும் இல்லையென்றால் தோற்க கூட வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியின் விவரங்களை பார்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. சரியாக சொல்வது என்றால் இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை. தேர்தல் நெருங்க தொடங்கியிருப்பதால் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. இது ஒருபக்கம் இருக்க பிரதமர் மோடி, ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவே பல மாதங்களாகே அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் , ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்று அண்மையில் பேசியிருந்தார். போதாக்குறைக்கு தனது நடைபயணத்தை ராமநாதபுரத்தில் இருந்துதான் அண்ணாமலை தொடங்கினார். இதுவும் ராமநாதபுரம் மக்களவை தொகுதி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஆனால், அதேவேளையில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடிக்கான வெற்றி வாயுப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு விவாதமும் எழாமல் இல்லை.
பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு முன்னள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவு கண்டிப்பாக தேவை எனவும் இல்லாவிட்டால் பிரதமர் மோடி தோற்க கூட வாய்ப்பு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளாரான பிரியன் தெரிவித்துள்ளார். ஒன் இந்தியா அரசியல் யூடியூப் தளத்திற்கு ப்ரியன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை பொதுக்குழு ஆதரவு உள்ளது. இருந்தாலும் எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா என்பது வரும் தேர்தலில் தான் தெரியவரும். குறிப்பாக தெற்கு பகுதிகளிலும்...டெல்டா பகுதிகளிலும்... அந்த விஷயம் பாஜகவிற்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் பன்னீர் செல்வத்தையும் விட முடியவில்லை.. ஒபிஎஸ் மூலமாக டிடிவி தினகரனையும் அவர்களால் (பாஜக) விட முடியாது.
பாஜகவை பொறுத்தவரை இரட்டை இலை வோட்பேங் அல்லது அதிமுக வாக்கு வங்கியை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான பாயிண்டாக உள்ளது. அதில் ஒரு போர்ஷனை விட்டால் கூட பிரச்சினை வரும்... பன்னீரையும் டிடிவியைவும் ஒதுக்கிவிட்டு எடப்பாடியை கூப்பிட்டதால் கோடநாடு விவகாரத்தை இரண்டு பேரும் ஒன்றாக கையில் எடுத்தார்கள்.
அதில் எதாவது எடப்பாடிக்கு சிக்கல் வந்தால் கட்சி நம்ம கிட்ட வரும் என்பது ஒரு பாயிண்ட்.. இன்னொரு பாயிண்ட் என்னவென்றால் இது மாதிரி ஒரு அழுத்தம் கொடுத்தால் பாஜக நம்மை தேடி வரும்.. மீண்டும் ஒரு தொடர்பு ஏற்படும் என்பதற்காக கையில் எடுத்தார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் கொடுத்த பிரஷர் நடந்து இருக்கிறது. ஏனென்றால் அடுத்த நாள் அண்ணாமலை சொல்வது மூலமாக அவர்கள் கொடுத்த பிர்ஷர் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஏன் இன்னும் ஃபர்தராக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றால்... இப்போ ராமநாதபுரத்தில் மோடி நிற்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன்... அவர் ராமநாதபுரத்திலும் நிற்கிறார்... காசியிலும் நிற்கிறார்.. ராமநாதபுரம் என்றால் ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்..
நீங்கள் டிடிவி, ஓ பன்னீர் செல்வம் ஆதரவு இல்லாவிட்டால் கடுமையான போட்டியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.அதானால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்க கூட வாய்ப்பு இருக்கு.. அந்த தொகுதி மட்டும் இல்லை.. விருதுநகர், தென்காசி, தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் டிடிவி, பன்னீர் செல்வம் ஆதரவு இல்லை என்றால் எடப்பாடி, பாஜக அணி தோல்வி அடைய வாய்ப்பு ள்ளது.
அதனால், இவர்களுக்கு புரிகிறது..புரியாமல் இல்லை.. ஆனால், எடப்பாடி ஒருபக்கம் அழுத்தம் கொடுக்கிறார். கட்சி அமைப்பு அவரிடம் இருப்பதால் அவருடைய பிரஷரையும் தாங்க முடியவில்லை. அவரையும் விட முடியவில்லை. பன்னீரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அவர் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார். மோடிக்கு ஆதரவாளராக இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications