சுயநலவாதிகளோடு சதி செய்தார் எடப்பாடி.. ஆனால், தர்மத்தின் பக்கம் நீதி தேவதை நின்றது - கோவை செல்வராஜ்
சென்னை: தர்மத்தின் பக்கம் நீதி தேவதை நின்றுள்ளது என்றும் பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று நிறைவேற்றப்பட்டு இருந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

உறுப்பினர்கள் நீக்கம்
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ஓபிஎஸ் வழக்கு
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டு உள்ளது. அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கோவை செல்வராஜ்
தீர்ப்பு வெளியானவும் ஓபிஎஸ் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ், "அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில் சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக தனித் தலைவராக வேண்டும் என்ற சதிகார செயலோடு செயல்பட்டார்.

விதிகளை மீறிய ஈபிஎஸ்
அதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்தோடு 23 ஆம் தேதி கூடிய பொதுக்குழு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமலேயே கலைந்து சென்றது. 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி கட்சி விதியை மதிக்காமல் கட்சியை கட்டுப்படாமல், கட்சி சட்ட விதிகளை மீறி செயல்பட்டார். இதனால் இன்று நீதி தேவதை ஜூன் 25 ஆம் தேதிக்கு பிறகு நடந்த அனைத்தையும் ஒத்திவைத்துள்ளது.
Recommended Video

தலைவணங்கி ஏற்கிறோம்
எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், அவரால் நீக்கப்பட்டதும், அவரால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதும் நிராகரிக்கப்பட்டது. இனி ஆண்டுக்கு ஒருமுறையே பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்ற விதிப்படி இந்த ஆண்டு பொதுக்குழுவை கூட்ட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், நீதிபதி, நீதி தேவதை நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம், சத்தியத்தின் பக்கம் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக கொடுத்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதிமுகவை கட்டிக்காப்போம்." என்றார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications