மர்மமா இருக்கே! கேள்வி மட்டும் எடப்பாடிக்கு.. தீர்ப்பு சாதகமா வருதே! சந்தேகம் கிளப்பும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : "அதிமுக வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் நீதிபதிகள் தீர்ப்பின்போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்ன?" என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, அதிமுக கொடி, கட்சி பெயர், சின்னத்தை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது எனக் கூறி வருகிறது ஈபிஎஸ் தரப்பு. அதேசமயம், தனது பலத்தை நிரூபிக்க திருச்சியில் நாளை அதிமுக முப்பெரும் விழாவை நடத்துகிறார் ஓபிஎஸ். இந்த மாநாட்டில் கட்சி பெயர், கொடி அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொதிப்பு : திருச்சியில் நாளை நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளருமான மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு மாற்றத்திற்கான மாநாடு. ஜெயலலிதா அடையாளம் காட்டிய ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்குவதாக திமிரெடுத்த முடிவினை எடப்பாடி எடுத்துள்ளார். இதனால் தொண்டர்கள் கொதிப்புடன் உள்ளனர்.
அதிமுகவின் அதிபர் எடப்பாடி பழனிசாமிதான் என எந்த உரிமையும் இன்னும் அவருக்கு தரவில்லை. அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூற எடப்பாடி பழனிசாமிக்கு என்ன உரிமை இருக்கிறது? அதன் பேட்டன்ரைட் எடப்பாடி பழனிசாமியின் அப்பாவின் பெயரில் உள்ளதா? கொடி என்பது எங்கள் உரிமை. கோடிகளைக் காப்பாற்றுவதற்காக எடப்பாடி போராடுகிறார். கொடியையும், கொள்கைகளையும் காப்பதற்காக எங்கள் தொண்டர்கள் போராடுகிறார்கள்.

மர்மமா இருக்குதே : அதிமுக கொடியை சட்டையாகக்கூட தைத்து போட்டுக் கொள்வோம், யாரும் கேள்வி கேட்க முடியாது. எங்களைக் கொடியை பயன்படுத்த கூடாது என சொல்லும் எடப்பாடி, அதிமுக என்ற கட்சியையே பயன்படுத்தக் கூடாது. எடப்பாடி இல்லாத அதிமுகவை மலைக்கோட்டை மாநகரம் முன்னெழுதப் போகிறது. நன்றி மறத்தல், சூழ்ச்சி, வஞ்சகம் அனைத்தின் அடையாளமாக எடப்பாடி திகழ்கிறார்" எனக் காட்டமாக கூறினார்.
மேலும், "நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் நீதிபதிகள் தீர்ப்பின்போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று குழப்பமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார் மருது அழகுராஜ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications