இப்பவும் காலம் கடந்து போகல.. “சூடு சுரணை இருந்தா அங்க போங்க”.. எடப்பாடிக்கு புகழேந்தி அட்வைஸ்!
எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் இல்லாவிட்டால் ஒரு வெற்றி கூட பெற முடியாது, நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கதிதான் எனத் தெரிவித்துள்ளார்.
இப்போதே பெரியகுளத்திற்குச் சென்று, நான் செய்தது தவறுதான் எனக் கூறி ஓபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என புகழேந்தி சாடியுள்ளார்.
ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரு தரப்பும் வேட்பாளரையும் அறிவித்தது. பின்னர், உச்ச நீதிமன்றம், பொதுக்குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்ட நிலையில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த தென்னரசு வேட்பாளர் ஆனார். அவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைத்தது. இதையடுத்து, ஓபிஎஸ் அணியின் செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகினார்.

ஓபிஎஸ் திட்டம்
ஓபிஎஸ் விலகிய நிலையில், அமமுகவும் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று கூறி போட்டியில் இருந்து விலகியது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. தனக்கு பலம்மிக்க கொங்கு பகுதியில், அதுவும் ஓபிஎஸ், தினகரன் களத்தில் இல்லாத நிலையில், அதிக வாக்குகளைப் பெற வேண்டிய நெருக்கடி ஈபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மோசமாக தோற்றால், அதை வைத்தே, எடப்பாடி பழனிசாமிக்கு வலிமை இல்லை, அவரால் அதிமுகவை வழிநடத்த முடியாது என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கத்திட்டமிட்டது ஓபிஎஸ் அணி.

புகழேந்தி அட்டாக்
அதற்கேற்ப இன்றைய வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார். 11 சுற்று வாக்குகள் முடிவில், சுமார் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார் அதிமுக வேட்பாளர். அடுத்தடுத்த சுற்றுகளில் இன்னும் இந்த வித்தியாசம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் அணியினர் தங்களது அட்டாக்கை தொடங்கியுள்ளனர். ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளரின் தோல்வியைத் தொடர்ந்து ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சூடு சுரணை இருந்தால்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "இடைத்தேர்தல் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன். ஈபிஎஸ் எடுத்த ஒற்றைத் தலைமை முடிவு மோசமான தோல்வியில் தான் முடியும் என்று சொல்லி வருகிறேன். கொங்கு மண்டலம் எங்களிடம் இருக்கிறது என்றார்கள். என்னவோ அவர்களின் தாத்தா வீட்டு சொத்து போல. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, மானம், சூடு சுரணை இருந்தால் வா என்றார் எடப்பாடி. அவருக்கு இதெல்லாம் இருந்தால் அவர் இப்போது அதிமுகவில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தொடர் தோல்விகளைச் சந்தித்து அதிமுகவுக்கு அவப்பெயரைத் தேடித் தந்துள்ளார்.

ஈபிஎஸ்ஸை மக்கள் ஏற்கவில்லை
எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது. ஈபிஎஸ் செயல்பாட்டால் அதிமுக தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். இருவரும் ஒற்றுமையாகச் செயல்பட வரவில்லை என்ற பெரிய மன உளைச்சலால் ஈரோடு கிழக்கில் உள்ள 15% அதிமுகவினர் வாக்களிக்கவே வரவில்லை. அவர்களும் வந்திருந்தால் வாக்குப்பதிவு சதவிகிதம் 90 சதவிகிதத்தை எட்டியிருக்கும்.

நிலைமைய பாருங்க
இப்போது 10வது ரவுண்டில் போய் டெபாசிட்டை காப்பாற்றி இருக்கிறார் அதிமுக வேட்பாளர். எப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.. திருமகன் ஈவெராவிடம் கடந்த தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றார் யுவராஜா. இப்போது யுவராஜையே களத்தில் நிறுத்தி இருக்கலாம். ஏன் எடப்பாடி பழனிசாமி போட்டியில் குதித்தார்? சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறப்போகிறது.

இப்பவும் காலம் கடந்து போகல
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. பழனிசாமி அவர்களே, ஓபிஎஸ் சொன்னதுபோல அதிமுக உங்க தாத்தா வீட்டு கட்சி அல்ல. இப்போதாவது ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச வேண்டும். உங்கள் தலைமையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி ஒற்றுமையை ஏற்படுத்தினால் நமக்கு நல்லது. ஒற்றுமையாக இல்லையென்றால் நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கதிதான். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக ஒரு வெற்றியைக் கூட பெற முடியாது என்பதைத்தான் ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு பாடமாகச் சொல்லி இருக்கிறது.

ஓபிஎஸ் வீட்டுக்கு வண்டியை விடுங்க
நிரந்தரமாக இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைத்தால், மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். எவ்வளவுதான் பணத்தை அள்ளி தண்ணீராக இறைத்துப் பார்த்தாலும், வெற்றி கிடைக்காது. பழனிசாமியின் கார் விரைந்து செல்லட்டும், இப்போதே பெரியகுளத்துக்கு போங்க.. ஓபிஎஸ் வீட்டில் தான் இருக்கிறார். என்னை மன்னித்து விடுங்கள் எனச் சொல்லிவிட்டு அதிமுக அலுவலக சாவியை கொடுத்துவிட்டு, எல்லோரும் சேர்ந்து பயணிப்போம் எனச் சொல்ல வேண்டும். ஓபிஎஸ் காலில் சென்று விழுந்து தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications