ரொம்ப தூரத்துல இல்ல.. விரட்டியடிப்போம்.. ‘பொய் மூட்டை’ ஜெயக்குமார்.. வைத்திலிங்கம் அட்டாக்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம்.
சென்னை : பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஓபிஎஸ் அறிக்கை விடுத்ததும், ஆத்திரத்தில் அவர் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என விமர்சித்துள்ளார் வைத்திலிங்கம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை அளித்த நிலையில், பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவைச் சந்தித்து வருவதாக விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருகின்றனர்.
இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்து, ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பதவி சுகத்திற்காக தேடி வந்த ஓபிஎஸ்ஸை அரவணைத்து துணை முதலமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் ஈபிஎஸ் எனக் கூறினார். இந்நிலையில், அதற்கு பதிலடியாக அறிக்கை விடுத்துள்ளார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.
அந்த அறிக்கையில், பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஓபிஎஸ் அறிக்கை விடுத்ததும், ஆத்திரத்தில் அவர் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என விமர்சித்துள்ளார் வைத்திலிங்கம்.
மேலும், மக்கள் முடிவுக்கு மாறாக செயல்பட்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதூரம் இல்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்து வெற்றி பெறும்.
2017ஆம் ஆண்டு பழனிசாமியின் ஆட்சி கவிழாமல் இருந்ததுக்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான். இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications