சொந்த ஊரை தாண்டினாலே செல்வாக்கு இல்லை.. இதில் பதவி வேறயா? ஓபிஎஸ் எடுத்த முடிவு.. பதறும் ர.ர.க்கள்
சென்னை: ஓ பன்னீர் செல்வம் மீது அவருடைய கட்சியினருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் தொடங்கியது முதல் அவருடன் இருப்பவர் தஞ்சை ஒரத்தநாட்டை சேர்ந்த வைத்திலிங்கம். இவர் ஜெயலலிதா காலத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வராகும் வாய்ப்பு இவருக்கு பக்கத்தில் சென்றுவிட்டு அப்படியே எடப்பாடி பழனிசாமி பக்கம் போனதாகவும் சொல்கிறார்கள். அன்று முதல் இன்று வரை ஓபிஎஸ்ஸுக்கும் அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்து வருபவர்களில் இவரும் ஒருவர்.

டெல்டா பகுதி
டெல்டா பகுதியில் செல்வாக்குமிக்கவராக இருந்து வருகிறார். தற்போது இரண்டாவது முறையாக அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போதும் அவர் ஓபிஎஸ் பக்கமே நிற்கிறார். ஆரம்பத்தில் ஒற்றை தலைமை பிரச்சினையின் போது மைத்ரேயன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமடைந்தனர்.

வைத்திலிங்கம்
அப்போதே மிச்சமிருக்கும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோரும் எடப்பாடி பக்கம் சாய்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் அப்படி செய்யவில்லை. கட்சியில் 2 சதவீத ஆதரவை மட்டுமே ஓபிஎஸ் பெற்றிருந்த போதிலும் அவருக்கு அடுத்தடுத்த மூவ்கள் குறித்து இந்த மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

பரிசு
இதற்கெல்லாம் பரிசாகதான் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைத்திலிங்கத்தை ஓபிஎஸ் நியமித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டபோது கட்சியில் நியமனம் செய்வது நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களை வைத்திலிங்கத்திடம் பன்னீர் ஒப்படைத்ததாக தெரிகிறது.

வைத்திலிங்கம்
அதாவது வைத்திலிங்கத்தின் முடிவுகளுக்கு பன்னீர் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திடுவது! இது பன்னீர் செல்வம் ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாகியது. இந்த அதிருப்திக்கு சில விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன. இதுகுறித்து பன்னீர் தரப்பினர் சிலர் கூறுகையில் "வைத்திலிங்கத்திற்கு டெல்டா மாவட்டத்தில் மட்டுமே செல்வாக்கு இருக்கிறது.

டெல்டாவை தாண்டினால்
அந்த டெல்டாவை தாண்டி வைத்திலிங்கத்திற்கு மக்கள் செல்வாக்கு என்பது கிடையாது. அப்படியிருக்கும் போது அவரை அவசரப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர் ஆக்கியிருக்க வேண்டாம் என எங்களில் பலர் கருதுகிறோம். மேலும் வைத்திலிங்கத்தை சந்தித்து ஆதரவு தெரிவிப்போருக்கு பதவி கொடுக்கப்படுகிறது. ஆனால் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களாகிய எங்களுக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை.

இரட்டை தலைமை
இதனால் ஏற்கெனவே இரட்டை தலைமையில் ஓபிஎஸ் இபிஎஸ் இருந்தபோது தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி போராடி பதவிகளையும் சீட்டுகளையும் பெற்று தந்தார். ஆனால் ஓபிஎஸ்ஸோ விட்டுக் கொடுத்தே "கெட்டு" போனார் என்ற பேச்சு அடிப்பட்டது. அதே போல்தான் தற்போது ஓபிஎஸ் - வைத்திலிங்கம் இடையே வைத்தியின் கை ஓங்குகிறது. இது போல் தனிப்பட்ட முறையில் ஒருவரது கை ஓங்குவது என்றுமே ஆபத்துதான். கட்சியில் முடிவெடுக்கும் உரிமையை வைத்திலிங்கத்திற்கு கொடுத்தது எங்களுக்கு அதிருப்திதான். எதுவாக இருந்தாலும் பலூனை எவ்வளவு தூரத்திற்கு பறக்க அனுமதித்தாலும் அதன் நூலை மட்டும் கெட்டியாக பிடித்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம் என்றார்கள்.
Recommended Video

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்
இதுகுறித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்களிடம் கேட்ட போது என்னாது எங்க அண்ணனுக்கு செல்வாக்கு இல்லையா. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும் டெல்டாவில் அவர் யார் என்பதை காட்டுவார். இன்று ஓபிஎஸ்ஸுக்கு 2 சதவீதம்தான் செல்வாக்கு இருக்கிறது என்ற போதிலும் நியாயம் , நீதி , தர்மம்தான் முக்கியம் என்ற ரீதியில் வைத்திலிங்கம் ஓபிஎஸ் பக்கம் நிற்கிறார். விரைவில் ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் இணைந்து அடுத்தடுத்து நகர்வுகளை எடுத்து வைத்து அதிமுகவை எடப்பாடி தரப்பிடம் இருந்து கைப்பற்றுவார்கள் என்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications