பதற்றம்.. ஜெயக்குமார் கார் மீது தாக்குதல் நடத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்? வந்து விழுந்த ஆபாச வார்த்தைகள்
சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து தலைமை கழக நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த குழுவில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த குழுவில் எடப்பாடி ஆதரவாளர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் உள்ளனர்.

ஆலோசனை
இந்த ஆலோசனை நடத்தி வந்த நிலையில் ஓபிஎஸ் வீட்டிலும் 3ஆவது நாளாக ஆலோசனை நடத்தப்பட்டது. அவரது வீட்டிலும் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்துதான் ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதை தவிர்த்து வேறு என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது என தெரியவில்லை.

சேலம் புறப்பட்ட எடப்பாடி
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறப்பட்டார். அங்கு அவரது இல்லத்தில் மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருவதை அறிந்த எடப்பாடி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தை வேகமாக முடித்துக் கொண்டனர்.

ஜெயக்குமார்
இதையடுத்து வெளியே வந்த ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் வருகையை புறக்கணிக்கவே ஆலோசனை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஓபிஎஸ் வருகைக்கும் ஆலோசனை கூட்டம் முடிக்கப்பட்டதற்கும் சம்பந்தமில்லை.

கார் மீது தாக்குதல்
வரும் 18ஆம் தேதி மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்க போகிறது. அன்று பொதுக் குழுவில் நிறைவேற்ற போகும் தீர்மானம் குறித்து இறுதி செய்யப்புவிட்டு காரில் ஏற முயன்ற போது அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சியை நீங்கள்தான் கெடுக்கிறீர்கள் என ஒருமையில் பேசினர். மேலும் அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications