Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் துரோகி? இந்தாங்க இத பாருங்க.. நேரம் பார்த்து மேட்டரை இறக்கிய ஓபிஸ் தரப்பு- ஷாக் ஆன ஈபிஎஸ் டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நம்முடைய பரம எதிரியான கருணாநிதியை சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசிய பதவி வெறி பிடித்த கழக துரோகி எடப்பாடி பழனிசாமி என ஓபிஎஸ் ஆதரவு ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    OPS எடுத்த 2 முக்கிய Moves! | Delhi போட்டுக்கொடுத்த Root? | AIADMK |*Politics

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று ஓபிஆர் பாராட்டியிருந்தார்.

    இதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடுமையாக விமர்சித்து துரோகி எனக் கூறிவரும் நிலையில், அதற்கு பதிலடியாக ஒரு வீடியோவை இறக்கியுள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

    முதல்வருடன் ஓபிஆர் சந்திப்பு

    முதல்வருடன் ஓபிஆர் சந்திப்பு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். தேனி மாவட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் பேசுவதற்காக முதல்வரை சந்தித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று ஓபிஆர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

     துரோகம்

    துரோகம்

    அதிமுகவில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் துரோகி எனக் குற்றம்சாட்டும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுக ஆட்சியைப் பாராட்டியதைக் குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்று கூட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துரோகத்தின் அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். துரோகம் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த ஒன்று. மு.க.ஸ்டாலினை ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்ததை அ.தி.மு.க தொண்டன் ஏற்றுக் கொள்ளவே மாட்டான் எனப் பேசியிருந்தார். ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலரும் ஓபிஆர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிலடி

    ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிலடி

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஆரை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கான பதிலடியாக, சட்டமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து அவரைப் பாராட்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சின் காணொளியை இன்று ‘தங்கமகன் ஓபிஎஸ்' எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த ஃபேஸ்புக் பக்கம் கடந்த தேர்தலின்போது அதிமுக பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட சமூக வலைதள பக்கம் ஆகும்.

    பெருமைக்குரிய கருணாநிதி

    பெருமைக்குரிய கருணாநிதி

    அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, "1957-ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்த கருணாநிதி, 13 முறை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும், ஒரு முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அரசியல் மட்டுமன்றி, தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கியத் தளங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது.

    அதிமுக வரவேற்றுள்ளது

    அதிமுக வரவேற்றுள்ளது

    தமிழ்நாட்டு அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர். கருணாநிதி முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி இருக்கிறார். அவரது ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மக்கள் நலன் கருதி அதிமுக சார்பில் நாங்கள் வரவேற்று இருக்கிறோம். ஒருவர் பிறக்கிறார், வாழ்கின்றார், மறைகின்றார். அந்த இடைப்பட்ட காலத்திலே செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். அந்த வகையிலே, கருணாநிதி சாதனை இந்த மண்ணிலே நிலைத்திருக்கும்" எனப் பேசினார்.

     எடப்பாடி பழனிசாமி துரோகி

    எடப்பாடி பழனிசாமி துரோகி

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசும் காணொளியைப் பகிர்ந்து, "நம்முடைய பரம எதிரியான தீயசக்தி கருணாநிதியை பற்றி சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசிய பதவி வெறி பிடித்த கழக துரோகி எடப்பாடி பழனிசாமி" எனக் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து சமூக வலைதளங்களிலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் முற்றியுள்ளது. இருதரப்பினரும் தரக்குறைவான வகையில் மாற்றி மாற்றி விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓபிஎஸ்ஸூம் பாராட்டியிருக்கிறாரே

    ஓபிஎஸ்ஸூம் பாராட்டியிருக்கிறாரே


    ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் பலமுறை கருணாநிதியை பாராட்டி பேசியிருக்கிறார். தனது தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர் என்றும் ஓ.பி.எஸ்ஸே சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும்போது இரங்கல் தீர்மானத்தில் பாராட்டிப் பேசிய வீடியோவை கட் செய்து பகிர்ந்து எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் தரப்பினர் விமர்சிப்பது தரக்குறைவான செயல் என எடப்பாடி ஆதரவாளர்கள் பொங்கி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+