"குறுகிய எண்ணம்".. அம்சமான 5 பாயிண்டுகள்.. சசிகலாவுக்கு ஓபிஎஸ் மறைமுக ஆதரவு?.. அப்போ அது நடக்குமா?
சென்னை: சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்காததும் அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொடுத்த இரு பக்க விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்கள்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பேச்சு தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருங்கிணைப்பாளராக வந்து ஓபிஎஸ் செய்த சாதனைகள் பட்டியலிட்டதாக சொல்லப்பட்டது.
அது போல் தற்போது புரட்சித் தலைவி அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் எனும் பெயரில் இரு பக்க விளம்பரங்களை சில நாளிதழ்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழங்கியுள்ளனர். அதில் தான் எந்தெந்த பதவிகளை வகித்தேன் என்பது குறித்து விவரித்துள்ளார்.

அரசு பதவிகளின் செயல்பாடுகள்
அது போல் அரசு பதவிகளில் செயல்பாடுகள் என்ற தலைப்பில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவி முதல் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வரை தனது செயல்பாடுகளை குறிப்பிட்டுள்ளார். அது போல் 4ஆவது முறையாக போடிநாயகனூர் சட்டசபை உறுப்பினராக இருந்ததால் மண்ணின் மைந்தன் என குறிப்பிட்டுள்ளார்.

உழைப்பு
மேலும் ஜெயலலிதா அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ஓபிஎஸ் அவரது பின்னால் நின்றிருக்கும் புகைப்படம் வெளியிட்டு "உழைப்பு, இயக்கத்தின் மீது உள்ள விசுவாசம், தலைமையிடம் கொண்டுள்ள பற்று இவற்றின் காரணமாக படிப்படியாக உயர்ந்தவர் ஓபிஎஸ் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்ட வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தோல்வி
இதையடுத்து தொடர் தேர்தல் தோல்விகளுக்கான காரணங்கள் என தலைப்பில் 5 பாயிண்டுகளை சொல்லியுள்ளார். அதில் முதல் பாயிண்ட் - தான் அதிகாரம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவினரால் மிகப் பெரிய சூழ்ச்சிகள் கட்சிக்குள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. 2 ஆவது பாயிண்டு- அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தலை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தாததற்கு என்ன காரணம்?

3ஆவது பாயிண்ட் முக்கியமானது
3ஆவது பாயிண்ட்தான் மிக முக்கியமான பாயிண்டாகும். கட்சி என்பது ஒரு குடும்பம் போல! எனவே கட்சிக்குள் சில சலசலப்புகள் வருவது இயல்பு. கட்சியில் குறிப்பிட்ட ஒரு குழுவினர் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்திய காரணத்தினால் ஓபிஎஸ்ஸால் தர்மயுத்தம் நடத்தப்பட்டு தலைமை கழக நிர்வாகிகளால் கட்சியில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு தொண்டர்களின் கைக்கு கட்சி மாறிய பிறகு , விலகி சென்ற ஒரு குழுவினர் கட்சியின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் பின்பற்றி, மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் அவர்களை கட்சிக்குள் இணைத்து ஜெயலலிதாவின் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து தொண்டர்களின் இயக்கமாக கொண்டு செல்லாமல் நான் மட்டும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற ஒரு சிலரின் குறுகிய எண்ணத்தினால் கட்சியின் செல்வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிமுக புத்துணர்ச்சி பெறும்.

ஓபிஎஸ்ஸை உதாசீனம்
4ஆவது பாயிண்ட் - 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அவசர கதியில் நிறைவேற்றியதே தென் மாவட்டங்களில் அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. 5 ஆவது பாயிண்ட் - ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இயற்கையாக மக்கள் செல்வாக்கும், தொண்டர்களின் செல்வாக்கும் இருந்த ஓபிஎஸ்ஸை முன்னிலைப்படுத்தாமல் உதாசீனப்படுத்தியதே தேர்தல்களில் கழகம் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என பட்டியலிட்டுள்ளார்கள். ஒற்றைத் தலைமை பிரச்சினையை கொண்டு வந்தால் சசிகலாவை நேரில் சென்று பார்ப்பேன் என ஓபிஎஸ் , எடப்பாடி தரப்பை மிரட்டி வைத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் விளம்பரங்களிலும் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளே சொல்லப்பட்டுள்ளன.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications