"ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்".. சட்டசபையில் கொந்தளித்த அதிமுக எம்எல்ஏ! இதென்ன ரூட்டு மாறுது?!
சென்னை: கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்க மசோதா சட்டசபையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இன்று சட்டசபையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன், "ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்பபெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. 5வது நாளாக சட்டசபை இன்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதா மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் இன்று சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பி அனுப்பினார். அதன்பின் இந்த சட்ட முன்முடிவு இன்று பேரவையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பேசிய சபாநாயகர் அப்பாவு, "பேரவைத் தலைவர் பேசத் தொடங்கியவுடன் மற்ற மைக்குகள் ஆஃப் ஆகிவிடும். யாரும் ஆளுநர் மைக்கை ஆஃப் செய்யவில்லை. அவர் ஆளுநர் உரையை வாசித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. உரையை வாசிக்காமல் பேச முயன்ற காரணத்தால், பேரவைத் தலைவராக பேசியதால் அனைத்து மைக்குகளும் ஆஃப் ஆகிவிடும்" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, "ஆளுநருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். முதல் தர மாநிலத்தில் worst class ஆளுநராக இவர் உள்ளார்" என்று தெரிவித்தார். பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், "சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பது ஏற்புடையது அல்ல. ஆளுநர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தில் பலமுறை குட்டுப் பெற்ற இந்த ஆளுநர் இதை திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநர் மைக் அணைத்து வைக்கப்படவில்லை. உண்மைக்கு புறம்பான கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்" என்று கூறினார். இதனைத்தொடர்ந்து பேசிய கொங்கு ஈஸ்வரன், "நாம் எவ்வளவு கண்ணியமாக நாகரீமாக நடந்து கொண்டாலும் ஆளுநர் மாறுவதாக இல்லை. ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதை கண்டிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், "ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டனத்திற்குரியது. எனவே ஆளுநரை திருப்ப வேண்டும்" என்று தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்காத நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான அய்யப்பன் மட்டுமே பங்கேற்றார். அவரும், ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் எனப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுக அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு அறையில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணையப்போகிறாரா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில், அதற்கு முன்னதாக மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் தரப்பின் பலம் குறைந்து கொண்டே வரும் சூழலில் தான் இன்று ஓபிஎஸ் தவிர ஓபிஎஸ் பக்கம் இருக்கும் ஒரே எம்.எல்.ஏவான அய்யப்பன் இன்று ஆளுநரைக் கண்டித்து சட்டசபையில் பேசி இருக்கிறார்.
-
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications