எடப்பாடியை சந்தேகத்துடன் பார்க்கும் பாஜக... ஓபிஎஸ் வசமாகும் அதிமுக?
Recommended Video
சென்னை: அதிமுகவை துணை முதல்வர் ஓபிஎஸ் வசம் ஒப்படைப்பதற்கான நகர்வுகளை பாஜக மேற்கொண்டிருக்கிறதாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பதால் அவர் மீது பாஜக தரப்பு நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்தவர் துணை முதல்வர் ஓபிஎஸ். இதனைத் தொடர்ந்து பாஜகவுடன் மிக நெருக்கமானார். என்னதான் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் என்றாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் நெருக்கடிக்குள் சிக்கினார்.
இதையடுத்து ஓபிஎஸ் அணியை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஓபிஎஸ்-க்கு தரப்பட்டது.

ஓபிஎஸ் அதிருப்தி
ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்பு, ஆட்சியிலும் கட்சியிலும் தமது கைகளே ஓங்கியிருக்குமாறு பார்த்துக் கொண்டார். இதனால் துனை முதல்வர் ஓபிஎஸ் மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தார்.

மிடாஸ் கொள்முதல்
பாஜக சொல்வதை கேட்டு ஆட்சியை நடத்தினாலும் சசிகலா குடும்பத்துக்காக பொருளாதார ஆதாயங்களுக்கு குறைவில்லாமல் பார்த்து கொண்டது முதல்வர் எடப்பாடி தரப்பு. டாஸ்மாக் நிறுவனத்துக்கு சசிகலா குடும்பத்தின் மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து கொள்முதல் தற்போதும் செய்யப்பட்டுதான் வருகிறது.

சசிகலாவை சந்தித்தது எடப்பாடி தரப்பு?
அத்துடன் பெங்களூரு சிறையில் சசிகலாவை முதல்வர் எடப்பாடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து பேசியிருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பாஜக அணி தோல்வி
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக அணி படுதோல்வி அடைந்தது. இதில் தங்களது தோல்விக்கு முதல்வர் எடப்பாடி தரப்புதான் காரணம் என பாஜக மேலிடம் உறுதியாக நம்புகிறது. அண்மையில் டெல்லியில் தமிழக அமைச்சர்கள் இருவரிடமும் இதை வெளிப்படையாகவே பாஜக தெரிவித்திருக்கிறது.

ஓபிஎஸ் வசமாகும் அதிமுக
பாஜகவைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி தரப்பு சசிகலாவின் நம்பிக்கைக்குரியவர்களாகவே இன்னமும் இருக்கிறார்களே என்கிற கோபத்தில் இருக்கிறதாம். இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை நியமிக்கும் வேலைகளை பாஜக ஜரூராக மேற்கொண்டு வருகிறதாம். இதன் மூலம் எடப்பாடி அணிக்கு கடிவாளம் போட முடியும் என கணக்குப் போடுகிறதாம் பாஜக.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications