எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றலாமா.. வைத்திலிங்கம் மீது ஓபிஎஸ் அப்செட்
Recommended Video
சென்னை: எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வகையில் வைத்திலிங்கம் எம்பி நடந்து கொள்வதாக கூறி கோபமாக இருக்கிறாராம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீது ஓ.பி.எஸ். கோபமாக உள்ளாராம். தனக்கும், தனது மகனுக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் வைத்திலிங்கம் செயல்படுவதாக ஓ.பி.எஸ்.நினைக்கிறாராம்.

இந்நிலையில் சசிகலாவை வாரிசு அரசியல் செய்வதாக கூறி ஒதுக்கி வைத்துவிட்டு ஓ.பி.எஸ். எப்படி வாரிசு அரசியல் செய்யலாம் என வைத்திலிங்கம் எடப்பாடியிடம் ஆவேசப்பட்டாராம். அதனை ஆமோதிப்பது போல் எடப்பாடியிடம் இருந்து பதில் வந்ததாம்.
இதையடுத்து ராஜன் செல்லப்பாவின் கருத்தான ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலுபடுத்தக்கோரி சில எம்.எல்.ஏ.களுக்கு சிக்னல் கொடுத்தாராம் வைத்திலிங்கம். அவர் சிக்னல் கொடுத்ததன் எதிரொலியாக குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரன் ஓ.பி.எஸ்.பெயரை குறிப்பிட்டே வீடியோ வெளியிட்டார்.
அண்மைக்காலமாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு எந்த நிகழ்ச்சிகளிலும் ராமச்சந்திரன் தலைகாட்டுவதில்லை. இப்போது கூட கேரளாவில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென அவர் ஓ.பி.எஸை விமர்சித்து வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் வைத்திலிங்கம் உள்ளாராம்.
கடந்த தேர்தலில் குன்னம் தொகுதியில் ராமச்சந்திரன் போட்டியிட நால்வர் அணியில் இருந்த வைத்திலிங்கம் தான் சிபாரிசு செய்தாராம். இப்படி தன்னை வளர்த்து விட்ட வைத்திலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததற்கு ஓ.பி.எஸ்.தான் காரணம் என கர்ஜிக்கிறாராம் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.
ஆனால் தனக்கு எதிராக இப்படி வைத்திலிங்கம் செயல்படுவதால் கடும் அதிருப்தி மற்றும் கோபத்தில் இருக்கிறாராம் ஓ. பன்னீர் செல்வம்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications