"துரோகிகளை உடனே நீக்குங்கள்.. அதிமுகவுக்காக ஒரு தியாகமும் செய்யாதவர் ஓபிஎஸ்!" கே.பி.முனுசாமி பரபர
சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெரும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது.
Recommended Video
இன்று காலை முதலே அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதேநேரம் மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்திலும் பெரும் பதற்றமான சூழல் உருவானது. கட்சித் தலைமை அலுவலகத்தை ஒபிஎஸ் தரப்பு கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

அதிமுக
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இன்று காலை தீர்ப்பு அளித்த நீதிமன்றம், பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்தவில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

4 மாதங்கள்
இதையடுத்து அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 4 மாதங்களில் அங்குப் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொண்டர்கள் முழக்கம்
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெரும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது. ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தொண்டர்கள் பொதுக்குழு நடைபெறும் இடத்திலேயே முழக்கமிட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்
இதற்கிடையே மேடையில் கே.பி. முனுசாமி இப்போது பேசிய பேச்சு பரபரப்பை உருவாக்கி உள்ளது. அதாவது கட்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கே.பி. முனுசாமி பேசி உள்ளார். ஓபிஎஸ் மட்டுமின்றி மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை அதிமுகவில் இருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு தியாகமும் செய்யாதவர்
கே.பி முனுசாமி மேலும், பேசுகையில், "மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது. கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர் செல்வம். எம்ஜிஆரால் தீய சத்தி என்று அடையாளம் காட்டப்பட்டவருடன் இணைந்து செயல்படலாமா? துரோகிகளைக் கட்சியை விட்டு நீக்குங்கள் என்று சொன்ன பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து ஏற்கப்படும். திமுகவுடன் கூட்டணி சேர்ந்தவர்களை உங்கள் சக்தி நிச்சயம் அழிக்கும்" என்று கே.பி முனுசாமி ஆவேசமாகப் பேசினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications