இத்தனை பொருட்களா? பத்தாம் தேதி வருது..பள்ளிகள் திறக்க போகுது! தமிழ்நாடு அரசு வெளியிட்ட மெகா பட்டியல்
சென்னை: அரசு, அரசு உதவிபெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் மற்றும் அரசு ஏற்கனவே அறிவித்த பொருட்கள் தரப்படும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தாலும் ஜூன் முதல் வாரத்தில், அதாவது ஜூன் 4-ம் தேதி எண்ணிக்கை நடைபெற்றது. அதிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவர், மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 2023-24ல் வழங்கப்பட்ட பழைய பயண அட்டை, பள்ளிகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் மாணவர்கள் சென்று திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின் படி, தமிழ்நாடு அரசு. பள்ளிக்கல்வித் துறையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்குப் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை. காலணிகள், காலேந்திகள் மற்றும் கம்பளிச்சட்டை மழைக்கோட்டு. பூட்ஸ் மற்றும் சீருடைகள், காலுறைகள், வண்ணப்பென்சில்கள், வண்ணக்கிரையான்கள், மிதிவண்டிகள், கணிதஉபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இவற்றில் பள்ளி திறக்கப்படும் நாளான 10.06.2024 அன்றே மாணவ / மாணவிகளுக்குப் பாடப்புத்தகம். நோட்டுப்புத்தகம் மற்றும் புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
பாடப்புத்தகம் வழங்கப்படும் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கை 70,67,094, நோட்டுப்புத்தகம் வழங்கப்படும் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கை - 60.75.315, புவியியல் வரைபடம் வழங்கப்படும் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கை - 8,22,603" என கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications