அனலை கிளப்பிய நீயா நானா.. இயற்கை விவசாயம் டூ சாதி வெறி.. ஜப்பானில் வாழும் முனைவர் அதிரடி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நீயா நானா தொடரில் படித்து ஐடி துறையில் பெரிய பதவியில் இருப்போர் விவசாயத்திற்கு வருவதை எதிர்த்து ஒருவர் பேசியிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவிற்கு ஜப்பானில் வாழும் முனைவரான கணேசன் பதிலளித்துள்ளார். அந்த பதிவினை அப்படியே பார்ப்போம்.

சுயசார்பு என்று சொல்வார்கள், ஆரோக்கியம் என்று சொல்வார்கள்

Organic Farming - Casteism Dr Ganesan who lives in Japan posted a Twitter post

இயற்கை விவசாயம் நிலவுடமை சமுதாயத்தின் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் நவீன வடிவம்.

விவசாயம் = நிலவுடைமை = சாதிய ஆதிக்கம்

சிறு குறு விவசாயிகள் பிள்ளைகள் படித்துவிட்டு விவசாயத்தை விட்டு வெளியேறிட்டாங்க. இதனை நிலவுடைமை சமுதாயத்தால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்

அதன் வெளிப்பாடு தான் 100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாயத்துக்கு ஆள் கிடைக்கல, சத்தான உணவு கிடைக்கல இத்தியாதி எல்லாம் சொல்லி இயற்கை விவசாயம் என்று நிறுவுவது.

Organic Farming - Casteism Dr Ganesan who lives in Japan posted a Twitter post

சொன்ன வேலைய சொன்ன நேரத்துல கொடுத்தக் கூலிக்கு வேலை செய்யும் ஆட்கள் கிடைத்த காலம் போயி, கல்வி, உலகமயமாக்கல், white collar வேலைவாய்ப்புகளால் சிறு/குறு விவசாய பிள்ளைகள் மெல்ல வெளியேறுகிறார்கள், இதனை பண்ணையார்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். இயற்கை விவசாயம் என்று கவர்ச்சி காட்டினா ஐடி வேலையை விட்டுட்டு வந்த மண்வெட்டி பிடிப்பான் இல்லையா?

விவசாயம் பகுதி நேர வேலை (பணப்பயிர் தவிர்த்து) இதனை முழு நேர வேலையாக செய்வதால் உண்மையில் நம் மனிதவளம் வீணடிக்கப்படுகிறது.

இயந்திரங்களைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலமென்றாலும் இரண்டு மணி நேரத்துல நடவு நட்டு ஒரு மணி நேரத்துல அறுவடை செய்து கொண்டு போயிடறாங்க இங்கு ஜப்பானில்.

100 நாள் வேலை திட்டத்தால ஆள் கிடைக்கவில்லை, விவசாயம் செத்துப் போச்சு என்று ஒப்பாரி வெக்கறானுங்க சாதி வெறியனுங்க. இயந்திரம் பயன்படுத்த கையாளாகதவனுங்க. முழுநேர விவசாய வேலை செய்யற 35 வயசுக்கு குறைவான இளைஞர்கள விரல் விட்டு எண்ணிடலாம். அவன எல்லாம் திருப்பி மண்ணுல உழல வெக்கிற வேலையை பெருமை என்று சொல்லி சில தற்குறிகள் கத்திக்கிட்டிருக்கு.

Organic Farming - Casteism Dr Ganesan who lives in Japan posted a Twitter post

விவசாயம் பெருமை இல்ல. இயற்கையை அழித்து நம் உணவுத்தேவைக்காக உருவாக்கப்பட்ட தொழில். உங்களுக்கு அதில் ஆர்வமோ, நேரமோ இருந்தால் இயந்திரங்களின் துணையோடு பகுதிநேர வேலையாக மட்டும் செய்யுங்கள்.. பண்ணையாருங்க பேச்ச நம்ப போகாதீங்க.

ஜப்பான்ல வாரிசுகளுக்கு சொத்து எழுதி கொடுக்கணும்னா 50 % வரி (விவசாய நிலத்துக்கு எப்படி என்று தெரியவில்லை). நம்மூர் விவசாய நிலத்துக்கு இந்த சட்டத்தை கொண்டுவந்தால் கிராமங்கள் சாதிய ஆதிக்கத்துல இருந்து உருமாறிடும்" இவ்வாறு கூறியுள்ளார்.

இவரது பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், "விவசாயத்தொழிலே - சாதி .,ஆண்டான் அடிமை முறையின் நாத்தங்கால் . படிங்க நல்ல வேலைக்குப்போங்க நிறைய சம்பாதிச்சு விவசாயம் ஆடு மாடு நாய் நரி வளர்ப்புன்னு நவீன தொழில் நுட்ப முறையில் உங்க பொழுது போக்குக்கு போங்க . நவீனத்தீண்டாமையை இயற்கை விவசாயம் தற்சார்புன்னு கம்பி கட்டாதீங்க " என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+