தாய்ப் பத்திரம்.. பட்டா நிலம்.. முந்தைய அசல் ஆவணங்கள் சரிபார்த்த பிறகே பத்திரப்பதிவு: பதிவுத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணங்கள் பதிவு செய்யும்போது, சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் ஒப்பிடப்பட வேண்டும். முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பிறகே ஆவணத்தை பதிவு செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பதிவு அலுவலர்கள் நிவர்த்தி செய்த பிறகு பதிவு செய்யலாம் என பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

சொத்து விற்பனை தொடர்பான பத்திரம் பதியும்போது, முந்தைய அசல் ஆவணம், அதாவது மூலப்பத்திரம் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு சட்டத்தில் 55A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.

Original deed property deed registration

இதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம்கோர்ட், இப்புதிய பிரிவை பயன்படுத்த தடை விதித்தது. பதிவு சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பதிவு சட்டத்தில் மோசடியை தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, புதிய சட்டத்திருத்த மசோதாவை, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சட்டசபையில் 4 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தார்.

மூலப்பத்திரம் - அசல் ஆவணம்

முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பின்னரே ஆவணத்தை பதிவு செய்யலாம். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பதிவு அலுவலர்கள் நிவர்த்தி செய்த பிறகு பதிவு செய்யலாம் என்றும் தற்போது பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், பத்திரப்பதிவுத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஒரு பத்திரம் பதிவுக்காக சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படும் போது, அதற்கு, 10 நாட்களுக்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ், அந்த சொத்துக்கான மூலப்பத்திரமான அசல் ஆவணம் போன்றவற்றை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று, முந்தைய அசல் ஆவணம் இல்லாத நிலையில், அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது.அந்த சொத்து அடமானம் வைக்கப்பட்டு இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து, தடையில்லா சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்

முந்தைய அசல் ஆவணம்

மூதாதையர் சொத்தாக இருந்து, அதற்கு மூலப்பத்திரம் இல்லாத நிலையில், வருவாய் துறையில் வழங்கப்பட்ட பட்டா சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்.

முந்தைய அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அதுகுறித்து உள்ளூர் நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரம், காவல் துறையினர் வழங்கிய, 'கண்டறிய முடியவில்லை' என்ற சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 விதமான அறிவிப்பு - குழப்பம்?

இதனிடையே, இரு வகையான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பதால் சில குழப்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.. காரணம், பதிவு சட்டத்தின், 55A பிரிவை எதிர்த்து மீண்டும் ஒருவர் தொடர்ந்த வழக்கை, சமீபத்தில் விசாரித்த சுப்ரீம் கோர்ட் இப்பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இப்போது, சொத்து பதிவுக்கு மூலப்பத்திரம் கட்டாயம் என, புதிதாக சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நிறைவேறியிருக்கிறது..

இந்த இரு வேறு சுற்றறிக்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணி வருவதாக தெரிகிறது. சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்றாலும் இது சட்டமாகவில்லை.. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க, பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அமலுக்கு வரும் போது, எதை பின்பற்ற வேண்டும் என்பதை, அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+