புற்றுநோயால் பாதிப்பு.. கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்
சென்னை: கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்தார். ஒரிசா பாலு மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆமைகள் வழித்தடம் குறித்தும் தமிழர்களின் கடல் பயணம் குறித்தும் ஆய்வு செய்து வந்தவர் ஒரிசா பாலு... கடந்த ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. வாய்ப்புற்று நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட ஒரிசா பாலு ஆழ்வார் பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

குமரி கண்டம் தொடர்பான ஆய்வையும் ஒரிசா பாலு எழுதிக் கொண்டு இருந்தார். ஒரிசா பாலுவின் உயிரிழப்பு இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் சார்ந்த பல தொல்லியல் நூல்களையும் ஒரிசா பாலு எழுதியிருக்கிறார். ஒரிசா பாலுவின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் ஒரிசா பாலு உயிரிழந்ததையடுத்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications