முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers- டீமுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான The Elephant Whisperers தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்னர்.
திரை உலகின் மிக உயரிய ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதே ஆஸ்கர் விருதில் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் The Elephant Whisperers என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் தொடர்பானது இந்த ஆவணப் படம். வனத்தில் தாயை பிரிந்து தத்தளிக்கும் குட்டி யானைகள், முதுமலையில் பராமரிக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு ரகு, 2019-ல் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பொம்மன், பெள்ளி. இவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் The Elephant Whisperers ஆவணப் படம்.

2019-ம் ஆண்டு The Elephant Whisperers ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோர் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி இருந்தனர். இப்போது இந்த ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

The Elephant Whisperers ஆவணப் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதன் முதலில் 2 பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதே போல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: முதுமலை வனச்சரகத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் முயற்சிகளை கூறும் கதை. இதயத்தைத் தொடும் கதை. இந்த விருது நாட்டிற்கு பாராட்டுக்களைப் பெற்று ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது... சிறந்த ஆவணப்படமாக, குறும்படத்திற்கானஆஸ்கார் விருதை வென்றதற்காக வாழ்த்துகள்.உண்மையிலேயே, தகுதியான விருது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications