அதிரடி "திருப்பம்".. கமலுடன் கை கோர்க்க தயாராகும் ஓவைசி.. 25 சீட் கேட்கிறார்.. செட் ஆகுமா?
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கை கோர்க்க ஓவைசி முடிவு செய்துள்ளார்.. மேலும் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து 25 இடங்களில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து இன்றைய தினம் தமிழக கட்சியின் மாநில நிர்வாகிகளோடு ஓவைசி ஹைதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் விவகாரங்கள், தொகுதி ஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றில் முனைப்பு காட்டி வருகின்றன.
அந்த வகையில், கடந்த 2 நாட்களாகவே ஒரு செய்தி தமிழக அரசியலில் பரபரத்து வருகிறது.. அது, அசாதுதீன் ஓவைசியும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதுதான்.. நடந்து முடிந்த பீகார் தேர்தலாகட்டும், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலாகட்டும், இந்த தேர்தல்களில் ஒவைசி தவிர்க்க முடியாத நபராகிவிட்டார்.

முஸ்லீம்கள்
கடந்த 2015-ல் பீகார் சட்டப்பேரவை தேர்தலில்தான் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சியில் ஒவைசி முதன்முதலாக போட்டியிட்டார்.. ஆனால், டெபாசிட் கூட கிடைக்கவில்லை.. இதற்கு பிறகுதான் அவரது வளர்ச்சி படிப்படியாக தென்பட்டு, இறுதியில் பீகார் தேர்தலில் மலைக்க வைத்ததுடன், தன் மீதான கவனத்தையும் தேசிய அளவில் திருப்பி உள்ளார்.

மநீம - ஓவைசி
தற்போது தமிழகத்திலும் ஒவைசி போட்டியிடுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக செய்திகள் கசிந்தன.. அப்படி ஒருவேளை ஒவைசி தமிழக தேர்தலை எதிர்கொண்டால், அவர் தனியாக நிற்பாரா? அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான கமலுடன் ஒவைசி கூட்டணி வைப்பார் என்ற உப தகவலும் சேர்ந்து கசிந்தது என்றாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

25 சீட்டுகளா?
இப்போது, அது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகி வருகிறது.. இன்று தமிழக கட்சியின் மாநில நிர்வாகிகளோடு ஓவைசி ஆலோசனை நடத்தி வருகிறார்... அதிலும், 25 தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவது என்ற முடிவில் ஓவைசி இருப்பதாகவும், அதற்காக எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து ஒரு வியூகம் அமைப்பதற்காகவே ஓவைசி தமிழக நிர்வாகிகளோடு ஹைதராபாத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திருச்சியில் மாநாடு
அதுமட்டுமல்ல, இதற்காக ஜனவரி மாதத்தில் திருச்சி மற்றும் சென்னையில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றையும் நடத்த ஓவைசி முடிவு செய்துள்ளாராம்.. அப்படி தேர்தலில் போட்டியிடுவதென முடிவெடுத்துவிட்டால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஓவைசி, தனித்தே போட்டியிடலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

இஸ்லாமிய அமைப்புகள்
ஒருவேளை 3-வது அணியில் கூட்டணி அமைத்து போட்டியிடவும் ஆலோசனை நடந்து வருகிறதாம்.. அப்படி கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வதானால், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு அமையுமா என்பது தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறதாம். கமல் கட்சி போலவே, நாம் தமிழர் கட்சியுடனும் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும் ஒவைசி ஆலோசனை நடத்த உள்ளாராம். இதைதவிர, ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளையும் தமிழகத்தில் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்கலாமா என்ற வியூகமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணி
இதற்கெல்லாம் காரணம், வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுக கூட்டணிக்கே சாதகமாக விழும் நிலையில், ஒவைசி இங்கு நேரடியாக களம் கண்டால், அவருக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்புதான்.. அதாவது திமுகவின் முஸ்லிம் ஓட்டுக்களை பிரிக்க ஒவைசி கூட்டணி வைக்கலாம் அல்லது தனித்து களம் இறங்கலாம் என்கிறார்கள். ஒருவேளை கமலுடன் ஓவைசி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், நிச்சயம் திமுக, காங்கிரஸ், அதிமுக ஓட்டுக்களை பிரிக்கவே செய்யும் என்பதையும் மறுக்க முடியாது.

B டீம்
கமலும் சரி, ஒவைசியும் சரி, இருவருமே பாஜகவின் B டீம் டீம் என்று விமர்சிக்கப்பட்டு வருபவர்கள்.. நாங்கள் அதுபோன்றவர்கள் இல்லை என்று இரு தரப்புமே சொல்லி வந்தாலும், பி டீம் என்ற பார்வை இவர்கள் மீது பதிந்து போய் உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், இவர்கள் 2 பேரும் மறுபடியும் இணைந்தால், B டீம் என்பது உறுதியாக்கப்பட்டு விடுமா? அல்லது அனைத்து விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு அதிமுக, திமுகவின் ஓட்டுக்களை இவர்கள் பிரிக்க முனைவார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications