Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EC வைத்த அடுத்த ஆப்பு..12.43 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்! காலியாகும் ஓட்டு? மாவட்ட வாரியாக லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 12.43 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர்களுடைய பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கினர்.

அந்தப் படிவங்கள் திரட்டப்பட்ட பிறகு, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எஸ்ஐஆர் தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது வெளியான வரைவு பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

Voter list Tamil Nadu SIR

தேர்தல் ஆணையம்

அதாவது, மொத்தமாக 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேவையான ஆவணங்கள் இல்லாமை, இரட்டை பெயர்கள், முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து திருத்தப் பணிகளும் முடிந்த பிறகு பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பினும், சில விவரங்கள் சரியாக இல்லாததால், தமிழகம் முழுவதும் 12.43 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தப் பட்டியலில் அதிகமானோர் சென்னை, திருவள்ளூர், கோவை போன்ற மாவட்டங்களில் உள்ளனர். சென்னையில் மட்டும் 2.37 லட்சம் பேருக்கும், திருவள்ளூரில் 1.85 லட்சம் பேருக்கும், கோவையில் 1.10 லட்சம் பேருக்கும் நோட்டீஸ் சென்றுள்ளது. எஸ்ஐஆர் படிவங்களில் குறிப்பாக 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளுக்கு தொடர்புடைய குடும்ப விவரங்கள் அல்லது உறவினர் விவரங்கள் சரியாக வழங்கப்படாதது காரணமாக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

12.43 லட்சம் நோட்டீஸ்

மேலும் ஒரே வீட்டில் ஒரே பெயர் மீண்டும் மீண்டும் வருதல், பெயருடன் முகவரி பொருந்தாமல் இருப்பது போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள இடங்களிலும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பெற்றவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அந்தச் சந்திப்பில் வாக்காளர் விவரம் சரியாக உள்ளதா இல்லையா என்பதை அலுவலர் உறுதி செய்து பதிவு செய்வார். ஆனால் நோட்டீஸ் வந்தும், அலுவலரை சந்திக்காமல் இருந்தால், அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை வாக்காளர்கள்

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரியலூரில் 6,439, செங்கல்பட்டில் 63,373, சென்னையில் 2,37,619, கோவையில் 1,10,984, கடலூரில் 46,191, தர்மபுரியில் 2,852, திண்டுக்கல்லில் 2,926, ஈரோட்டில் 46,400 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இதேபோல கள்ளக்குறிச்சியில் 12,794, காஞ்சிபுரத்தில் 56,479, கன்னியாகுமரியில் 8802, கரூரில் 7931, கிருஷ்ணகிரியில் 24,022, மதுரையில் 16,201, மயிலாடுதுறையில் 14,788, நாகப்பட்டினம் 4493, நாமக்கல்லில் 14,577, பெரம்பலூரில், 4,561 புதுக்கோட்டையில் 33,374, ராமநாதபுரத்தில் 16,082, ராணிப்பேட்டையில் 17,860,
சேலத்தில் 26,463, சிவகங்கை 6,189, தென்காசியில் 12,021, தஞ்சாவூரில் 21,371, நீலகிரியில் 11981 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பூரில் 21,571

அடுத்ததாக தேனியில் 12,572, திருவள்ளூரில் 1,85,987, திருவாரூரில் 4,851, தூத்துக்குடியில் 13,569, திருச்சியில் 53,146, திருநெல்வேலியில் 15,223, திருப்பத்தூரில் 15,961, திருப்பூரில் 21,571, திருவண்ணாமலையில் 15,465, வேலூரில் 19,827, விழுப்புரத்தில் 15,720, விருதுநகரில் 16,418, என்ன மொத்தம் தமிழகம் முழுவதும் 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+