என்ன அதுக்குள்ள காணோம்.. நொடியில் காலியாகும் ரயில் டிக்கெட்டுகள்! ரயில்வே எடுத்த முக்கிய முடிவு!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் 150க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கல் பண்டிகையன்று சொந்த ஊரில் வழிபாடு நடத்துவது தமிழர்களின் பாரம்பரியம்.
குறிப்பாக தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள்.

பொங்கல் சிறப்பு ரயில்
குறிப்பாக ரயில் மூலம் மட்டுமே 7 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை அடுத்து பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. வழக்கமாக 60 நாட்களுக்கு முன்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அந்த வகையில் கடந்த 11ஆம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
இதனையடுத்து பொங்கலுக்கு கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் இடையே எழுந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட முக்கிய வழித்தடங்களில் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த தீபாவளியைப் போல, இந்த பொங்கலிலும் பயணிகள் நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முன்கூட்டியே திட்டமிட்டு ரயில்வே தயார் நிலையில் உள்ளது.
150 சிறப்பு ரயில்கள்
சென்னை மண்டலத்தை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மொத்தம் ஆறு கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் சுமார் 1000 ரயில்கள், அதில் 170 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழாக்காலங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், சிறப்பு ரயில்கள் இயக்குவது தெற்கு ரயில்வேயின் வழக்கமான நடைமுறையாகும். கடந்த தீபாவளி காலத்தில் மட்டும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
2025 தைப்பொங்கல்
இரண்டு வாரங்களுக்கு இயக்கப்பட்ட அந்த சிறப்பு ரயில்களில் மட்டும் 2.5 லட்சம் பயணிகள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வரும், 2025 தைப்பொங்கல் ஜனவரி 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழ்நிலையில், கூட்டநெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்ததும், சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் டிசம்பர் 15 முதல் இயக்கப்படும்.
சென்னை மதுரை ரயில்
இதனால் சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - நெல்லை, சென்னை - கோவை, சென்னை - இராமேஸ்வரம், சென்னை - தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில்களுக்கு மட்டுமல்லாமல், ஜனவரி 16 முதல் மீண்டும் சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு பயணிகள் அதிகளவில் திரும்புவதால், அந்த வாரத்திலும் கூடுதல் ரயில்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications