IT layoffs India: எச்சில் இலை போல் தூக்கி எறியப்படும் ஐடி ஊழியர்கள்! Silent Layoff செய்யும் நிறுவனங்கள்! ஆபத்தில் ஐடி?
சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தற்போது பணியாளர் நியமனத்தில் மிகப் பெரிய அளவிலான மறுசீரமைப்பைச் சந்தித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக, Teamlease Digital நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீதி சர்மா, தெரிவித்துள்ளார். 2023-24ஆம் ஆண்டில் சுமார் 25,000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முக்கிய தொழில் துறைகளில் ஒன்றாக விளங்குவது தகவல் தொழில்நுட்பம் (ஐடி). உலகின் முன்னணி மென்பொருள் சேவைகள் மற்றும் ப்ராஜெக்ட்களை இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்தத் துறையில் தற்போது ஒரு அதிர்ச்சி நிலை உருவாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணி நீக்கங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

ஐடி பணிநீக்கம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இதுவரை 2,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களையும், இன்ஃபோசிஸ் புதிய நியமனங்களை தள்ளிப் போட்டுள்ளதோடு, சுமார் 1,000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்துள்ளது. இதேபோல், விப்ரோ - 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள், டெக் மகிந்திரா - 1,500 பேர் என குறைந்த கால இடைவெளியில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய ஐடி ஜெயன்ட்களான, கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்றவை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேல் உலகளாவிய பணி நீக்கங்களை செய்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு தாக்கம்
உலக பொருளாதார மந்தநிலை காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் புதிய ப்ராஜெக்ட்கள் குறைந்துவிட்டன. ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் பணி தேவையற்றதாக மாறியுள்ளது. சில நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில் ஊழியர்களைக் குறைக்கும் முடிவை எடுத்து வருகின்றன.
இந்திய ஐடி துறை
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகிந்திரா, விப்ரோ போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது குழுக்களை மறுசீரமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசிஎஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆட்டமேஷன் செயல்பாடுகளை அதிகப்படுத்தும் நோக்கில் சுமார் 20,000 பணியாளர்களை குறைக்கும் திட்டத்தில் உள்ளது. அதேபோல், இன்போசிஸ் மற்றும் டெக் மகிந்திரா இணைந்து 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விப்ரோவும் இதேபோல் பணியாளர் மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ளது.
உலக பொருளாதார அழுத்தம்
இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு, உலக பொருளாதார அழுத்தம், வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவற்றின் தாக்கமாகும். இதனால் பழைய தொழில்நுட்ப திறன்களுக்கான தேவை குறைந்து, புதிய திறன்கள், குறிப்பாக AI, டேட்டா லிடரசி, பிளாட்ஃபார்ம் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அமைதியான பணிநீக்கம்
பல நிறுவனங்கள் தற்போது 'அமைதியான பணிநீக்கம்' (Silent Layoffs) என்ற முறையைப் பின்பற்றி வருகின்றன. அதாவது, வெளிப்படையான அறிவிப்பில்லாமல் பணியாளர்கள் நீக்கப்படுகிறார்கள். சிலர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமலோ அல்லது திடீர் செயல்திறன் மதிப்பீடு குறைக்கப்பட்டதாலோ வேலை இழக்கிறார்கள். சிலர் குறுகிய அவகாசத்தில் புதிய பணி தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2025 வேலை இழப்பு
சில நிறுவனங்கள் ரகசிய ஒப்பந்தங்களுடன் நிவாரண தொகை வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள ஊழியர்கள் கூடுதல் வேலைப்பளுவை ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம், ஆட்டமேஷன், மற்றும் செலவு சுருக்கம் ஆகியவை காரணமாக பணிநீக்கம் நடப்பதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக ஐடி துறையை முன்னேற்றிய இந்திய இளம் பொறியாளர்கள், தற்போது திறன் மேம்பாடு மற்றும் மறுபயிற்சி இல்லாததால் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications