இஸ்ரேலில் இருந்து இதுவரை எத்தனை தமிழர்கள் மீட்பு? குட் நியூஸ் சொன்ன அயலகத் தமிழர் நலத்துறை!
சென்னை: இஸ்ரேலில் இருந்து 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளதாக அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட தமிழர்களை அங்கிருந்து சென்னை, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் பெரும்பாலானோர் அங்கு ஆராய்ச்சி படிப்புக்காகவும், முதுநிலை படிப்புக்காகவும் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில், இதுவரை இரண்டு கட்டங்களாக புது தில்லி வந்த 49 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்களில் புது தில்லி வந்தடைந்த 49 தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசினால் விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 32 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 9 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர்.
மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்களால் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை, இந்நேர்வில் இஸ்ரேலில் இருந்து 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications