ஜாக்பாட்.. சிறை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.500 ஆக உயர்வு.. அரசாணை பிறப்பிப்பு
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தமிழகத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், ‛‛சிறைத்துறையில் பணியாறும் முதல் மற்றும் 2ம் நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் தறை கவாலர்களுக்கு ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்ப்படும். இதற்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications