Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பராசக்திக்கு காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக ஆதரவு.. தவிக்கும் திமுக.. தலைகீழாக மாறிய தமிழக அரசியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்கு முன்பாக ஹிந்தி எதிர்ப்பை பேசுபொருளாக்க திமுக நினைத்தது, ஆனால், இந்திரா காந்தியை விமர்சித்ததாக வான்டடாக வந்து வண்டியில் ஏறியது காங்கிரஸ். இதனால் படத்தின் நோக்கமே காலியாகிவிட்டது. இப்போது பிரதமர் விழாவில் பராசக்தி குழு கலந்து கொண்டதால் ஏதோ இது காங்கிரசுக்கு எதிரான படமாக பிம்பம் மாறிவிட்டது. இது ஒருபுறம் எனில், சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் எல் முருகன் வீட்டில் நடந்த பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பங்கேற்றது விவாதத்தை அதிகமாக்கி உள்ளது.

தமிழக அரசியலில் எப்போதுமே சினிமா பாணியில் திருப்பங்கள் நடப்பதுண்டு. ஆனால், ஒரு திரைப்படம் வெளியான உடனே அரசியல் பிம்பம் இவ்வளவு வேகமாகத் தலைகீழாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 'பராசக்தி' விவகாரத்தில் திமுக போட்ட கணக்கை, காங்கிரஸ் கட்சியின் அவசரமான எதிர்ப்பு தடம் புரளச் செய்திருக்கிறது.

Own Goal by Congress Why Parasakti is Pushing the DMK Alliance into a Corner while BJP Cheers

திமுக போட்ட கணக்கு... காங்கிரஸ் செய்த சொதப்பல்

தமிழகத் தேர்தலுக்கு முன்பாக, மீண்டும் ஒருமுறை 'ஹிந்தி எதிர்ப்பு' மற்றும் 'மத்திய அரசு எதிர்ப்பு' என்கிற அஸ்திரத்தைக் கையில் எடுக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் படம் பார்க்கப்பட்டது. ஆனால், படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து விமர்சனம் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் 'வான்டடாக' வந்து வண்டியில் ஏறினார்கள். காங்கிரஸின் இந்த எதிர்ப்பால், படத்தின் நோக்கம் அப்படியே திசைமாறிவிட்டது. மத்திய அரசை எதிர்க்க நினைத்த படம், இப்போது காங்கிரஸுக்கே எதிரான படமாகப் பார்க்கப்படத் தொடங்கிவிட்டது.

பிரதமர் விழாவில் 'பராசக்தி' டீம் - அதிர்ச்சியில் அறிவாலயம்

இந்தச் சூழலில், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் 'பராசக்தி' படக்குழுவினர் கலந்துகொண்டது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸால் எதிர்க்கப்படும் ஒரு படத்தை, பாஜக மறைமுகமாக ஆதரிக்கிறதோ என்கிற பிம்பம் உருவாகியுள்ளது. இது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் ஒரு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் - ரவி மோகன் பங்கேற்பு: அடுத்த விவாதம் ஆரம்பம்

அரசியல் சதுரங்கத்தில் இது ஒருபுறம் இருக்க, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் ஆகியோர் பிரதமருடனான பொங்கல் விழாவில் பங்கேற்றது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. "திரையுலகினர் மெல்ல மெல்ல பாஜக பக்கம் சாய்கிறார்களா?" அல்லது "இது வெறும் கலாச்சார நிகழ்வுதானா?" என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இதனால் பராசக்தி பட டீமை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளது. இது ஒருபுறம் எனில் விஜய் ஆதரவாளர்களும் பராசக்தி டீமை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பங்கேற்க முடியாது என மறுக்க முடியாது

அதேநேரம் பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பங்கேற்க வருமாறு அழைக்கும் போது, சிவகார்த்திகேயன், ரவி மோகன் போன்ற நடிகர்கள் கண்டிப்பாக மறுக்க இயலாது. ஆனால் இதில் பாஜக தான் சாமார்த்தியமாக பராசக்தி படத்தை பயன்படுத்திக் கொண்டதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராகுல் காந்தி நேற்று தான் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டார். மத்திய அரசு முடக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

திமுகவின் திட்டம்

ஆனால் காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்கள் காரணமாக பராசக்திக்கு மறைமுகமாக பாஜக ஆதரவு தரும் வகையில் நிகழ்வுகள் நடந்துவிட்டன. இதில் திமுக தான் சரியாக காய்நகர்த்தி மத்திய அரசுக்கு எதிரான படமாக பராசக்தியை காட்ட திட்டமிட்டது. தனது அரசிலுக்கு உதவும் என்று பராசக்தி படத்தை நம்பியது. ஏனெனில் தமிழக அரசியலில் 'பராசக்தி' என்றாலே அது ஒரு திராவிட அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் அந்தப் பெயர் இப்போது காங்கிரஸால் எதிர்க்கப்பட்டு, பாஜகவின் விழாக்களில் எதிரொலிப்பது தமிழக அரசியலில் ஒரு 'மெகா' திருப்பமாக இருக்கிறது.

இந்திரா காந்தி சென்டிமென்ட்

ஹிந்தி எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்த நினைத்தவர்களுக்கு, காங்கிரஸின் 'இந்திரா காந்தி' சென்டிமென்ட் முட்டுக்கட்டையாக மாறிவிட்டது. எதிரியை அடிக்க நினைத்த ஆயுதம், இப்போது கூட்டாளியையே காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. இறுதியில், இந்த அரசியல் குழப்பங்களால் யாருக்கு லாபம்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதேநேரம் இந்த பராசக்தி திமுகவுக்கு லாபம் இல்லாமல் போய்விட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+