டேமேஜ் பண்ணிட்டாங்க.. தனிமைப்பட்டுட்டோம்.. பொங்கிய ராகுல்! பின்னணியில் "கிங்".. வச்சு செய்த ப.சி!
சென்னை: நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை காரணமாக இஸ்லாமிய நாடுகள் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நுபுர் சர்மா நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இகழ்ந்து பேசினார்.
இவரின் கருத்து சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சந்தித்தது. பல நாடுகள் நுபுர் சர்மா கருத்தை விமர்சனம் செய்தது.

விமர்சனம்
இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு பாஜக சார்பாக கட்சி ரீதியான விசாரணையும் இவர் மீது நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கத்தார் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இஸ்லாமியர்களை அவமதிப்பது போல ஆகிவிடும் என்று கத்தார் இந்தியாவை விமர்சனம் செய்தது. ஈரான், குவைத், சவுதி போன்ற நாடுகளும் இந்தியாவை விமர்சனம் செய்தது.

இஸ்லாமிய நாடுகள்
இந்த நிலையில் சர்வதேச அளவில் இந்தியா விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டில், உள்ளுக்குள் நாம் வேறு பட்டு கிடக்கிறோம். இதனால் இந்தியா வெளிப்பக்கம் மிகவும் வீக்காகி உள்ளது. பாஜகவின் அவமானகரமான மதவெறி காரணமாக நாம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். அதோடு சர்வதேச அளவில் நம்முடைய நிலை காயப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ப. சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ப. சிதம்பரம் வைத்த விமர்சனத்தில், நுபுர் சர்மாவும், நவீன் குமாரும் இஸ்லாமியர்களின் மீதான எதிர்ப்பின் உண்மையான காரணகர்த்தாக்கள் கிடையாது, அவர்கள் இஸ்லாமாபோபியாவை உருவாக்கவில்லை. அவர்கள் தங்கள் கிங்கிற்கு கூடுதல் விசுவாசமாக இருக்க முயன்று உள்ளனர். அவ்வளவுதான். உள்நாட்டு எதிர்ப்பு காரணமாக பாஜக தங்கள் செய்தி தொடர்பாளர்களை நீக்கவில்லை.
Recommended Video

கடும் விமர்சனம்
சர்வதேச அழுத்தம் காரணமாக, உலக அளவில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாகவே பாஜக பின் வாங்கி உள்ளது. அதன் காரணமாகவே பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது, என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். கத்தார் என்பது மிக சிறிய நாடு என்றாலும், எண்ணெய் வர்த்தக ரீதியாக கத்தார், சவுதி உள்ளிட்ட நாடுகளை இந்தியா அதிகம் நம்பி உள்ளது, இதனால்தான் இந்தியா இப்படி இஸ்லாமிய நாடுகளிடம் இறங்கி சென்றுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.












Click it and Unblock the Notifications