பெரியாரிசத்தை ஒழிப்பேன் என்பதா? மோடியை தலைவராக ஏற்றதா?- பாஜக, அதிமுக மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
சென்னை: தந்தை பெரியார் ஒழிக்கத்தான் பாஜக இங்கு வந்திருக்கிறது என பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா பேசியிருப்பதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு காலத்தில் கழகங்கள் இல்லாத தமிழகம் என ஊர்தோறும் பிரசாரம் செய்தது பாஜக. ஆனால் பாஜகவின் இந்த பிரசாரம் போணியாகவில்லை. படுதோல்வியைத்தான் தந்தது.
இதனால் இந்த முறை வேறுவழியே இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதனால் திராவிட எதிர்ப்பு முழக்கத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியால் தைரியமாக முன்வைக்க முடியவில்லை.

பெரியாரிசத்தை ஒழிப்போம்
ஆனால் வெளியில் இருந்து வரும் இந்துத்துவா தலைவர்கள் அப்பட்டமாக தந்தை பெரியார், திராவிடர் இயக்கங்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கின்றனர். இதில் ஒன்றுதான் தேஜஸ்வி சூர்யா என்பவர், பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகத்துக்கு பாரதிய ஜனதா கட்சி வந்திருக்கிறது. தேஜஸ்வி சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் கண்டனம்
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 'பெரியாரிசம்' (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் 'சனாதன தர்மம்' என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.
|
தமிழர் தன்மானம் மீட்டவர்
தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் கட்சி தலைவர் மோடியா?
தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?. இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications