ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்!
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறது. இருப்பினும், மு.க.ஸ்டாலின் தோல்வி முதலமைச்சர் விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்திருந்தது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டிருந்த மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்திருந்தார். இது திமுகவினரை கடும் அப்செட் ஆக்கியது.

இந்நிலையில் இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், ஸ்டாலின் தோல்வியை விஜய் கூட விரும்பியிருக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "கொளத்தூரில் ஸ்டாலினின் தோல்வி வியப்பையும், அதிர்ச்சியையும் அளித்தது. அவர் கட்சி தோற்பது என்பது வேறு, ஆனால் அவரே தோற்பது என்பது வேறு. காமராஜர் தோற்றாரே, அண்ணா தோற்றாரே, இந்திர காந்தி தோற்றாரே! காமராஜர் தோற்றபோது நான் வருந்துகிறேன் என்று அண்ணா சொன்னார்.
நேற்று நான் பெரியவர் கி.வீரமணியை சந்தித்தேன். அப்போது காமராஜர் தோற்றதற்கு அண்ணா வருத்தப்பட்டதாக கூறினார். காமராஜர் எவ்வளவு பெரிய தலைவர்! அவர் தோற்றிருக்க கூடாது என்று அண்ணா கூறியதாக சொன்னார். அதேபோல மு.க.ஸ்டாலின் தோற்றது, முதலமைச்சர் விஜய்க்கு ஆழ் மனதில் வருத்தம் தந்திருக்கலாம். எனக்கு தெரியாது" என்று கூறியிருக்கிறார். இவரது பேச்சு தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு வரை, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கலந்தாலோசிக்காமல் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருந்தது. திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருந்தன. இருப்பினும் தேர்தலுக்கு பின்னர் இக்கட்சியின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்தாலோசித்து இருந்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அப்படி இல்லை.
இதனால் காங்கிரஸ் மீது திமுகவுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. நேற்று முன்தினம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான கட்டுரையில் "தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே இதற்கு குழிபறிக்கும் செயல்களை ராகுல் செய்தார். அதைப் பச்சையாக வெளிப்படையாகவே செய்தார். இதைச் சகித்துக் கொள்ளும் தேவை தி.மு.க.வுக்கு இல்லை. தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கிறது.
தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இப்படி ஒரு கெட்ட மதியாளரைத் தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது. 2018 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா, ராகுலை மேடையில் வைத்துக் கொண்டே பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிகிறேன்" என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். இத்தகைய தலைவர் மு.க.ஸ்டாலினை அவமானப்படுத்துவதைத் தான், நம்பிக்கைத் துரோகம் என்று தெரியாமல் செய்து வந்துள்ளார் ராகுல்" என்று விமர்சித்திருந்தது.
இந்த பின்னணியில்தான் தற்போது ப.சிதம்பரம் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியிருக்கிறார். இவரது கருத்துக்கள் தமிழக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்!











Click it and Unblock the Notifications