திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுத்த சிதம்பர முயற்சி.. ஒரே நாளில் பிரச்சனையை முடித்த ப.சிதம்பரம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பனிப்போர் நடத்தி வருகிறது. திமுக - காங்கிரஸ் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி முறியும் என கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ப. சிதம்பரம் பேச்சுவார்த்தையால் ராகுல் இறங்கி வந்து, கூட்டணியும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ப. சிதம்பரம் தலைமையில் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஷ் சோடங்கர் உடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வந்தது. மேலும் சோடங்கர் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசி வந்தார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி
அதனுடன் தவெகவுக்கு ஆதரவாகவும் சோடங்கர் பேசினார். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்து, தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸில் எதிர்ப்புகள் எழுந்தன. சில நிர்வாகிகளை தவிர மற்ற நிர்வாகிகள் திமுக கூட்டணியை தொடரவே விரும்பினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் திமுக கூட்டணி தான் சரியான முடிவு என கூறினார்கள். தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்த டிமேண்ட்களை திமுக ஏற்கவில்லை. திமுகவின் ஆஃபர்களை காங்கிரஸ் ஏற்கவில்லை.
ராகுல் பிடிவாதம்
இதனால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வந்தது. தேர்தல் தேதிக்கு மிகவும் குறைவான தேதிகளே உள்ளன. இது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் கிரிஷ் சோடங்கல் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து ப. சிதம்பரமே திமுகவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறார். நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை சிதம்பரம், செல்வப்பெருந்தகை பேசினார்கள்.
நேற்று இரவு செல்வப்பெருந்தகை இல்ல விழாவில் வைத்தும் பேசியுள்ளனர். இது கூட்டணிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் திமுக தலைமை, காங்கிரஸ் மேலிடம் 2 தரப்பினரிடமும் பேசியுள்ளார். அதற்கு முன்பு வரை சோடங்கர் சொன்னதை நம்பி, ராகுல் காந்தியும் திமுகவுடன் கூட்டணியை முறிக்கும் முடிவில் இருந்தார்.
சிதம்பரம் மேஜிக்
தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கும் ராகுல் வந்துள்ளார். ஆனால் சிதம்பரம் பேசிய பிறகு, அவர் மூலமாகவே திமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் கிரிஷ் சோடங்கர் இல்லாமலேயே திமுக . காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவுள்ளது.
39, 36 என காங்கிரஸ் இருந்த நிலையில், திமுக 25, 27 என்ற நிலையில் இருந்தது. தற்போது 28 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா இடம் ஆகியவற்றுடன் பங்கீடு இறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 36 தொகுதிகள், 2 ராஜ்யசபா, உள்ளாட்சியில் 20 சதவீதம் என விடப்பாடியாக இருந்த ராகுல் சிதம்பரம் பேசியதால் முடிவை மாற்றியுள்ளார்.
தொடரும் கூட்டணி
ஒருகட்டத்தில் திமுக தலைமையும் காங்கிரஸை விட்டு விலகும் எண்ணத்திற்கு வந்துவிட்டது. அவர்களும் மாற்று திட்டங்களை வகுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த கூட்டணி 2 கட்சிகளுக்கும் முக்கியம் என சிதம்பரம் பக்குவமாக பேசி மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை பாதுகாத்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications