விடாமல் தலைவர்களைத் துரத்தும் கொரோனா.. கார்த்தி சிதம்பரத்தையும் தொற்றியது.. வீட்டுத் தனிமையில்!
சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த் தகவலை அவரே ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார். அந்தப் பதிவில், ''எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள்தான் உள்ளது.மருத்துவ அறிவுறுத்தலின் பேரில் தற்போது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னை சமீபத்தில் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளவும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவுக்கு 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் அரசியல் பிரபலங்களான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேசம் ஜல் சக்தி அமைச்சர் மகேந்திர சிங், உத்தரப்பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அரசியல் தலைவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications