Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தரும் இலவசங்கள் என் வரிப் பணம்; சொந்த நிதி அல்ல! பாரிவேந்தர் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கொண்டுவந்துள்ள இலவசத் திட்டங்கள் எனது வரிப் பணத்திலிருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. என்னைப் போலச் சொந்த நிதியிலிருந்து திமுகவினர் மக்களுக்கு உதவவில்லை என பாரிவேந்தர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்த பாரிவேந்தர், இந்த முறை பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Paarivendhar criticizes DMK freebies scheme

பெரம்பலூர் தொகுதியில் இவரை எதிர்த்து திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் போட்டியிடுகிறார். ஆகவே, தேர்தல் களம் அனல் வீசி வருகிறது. அதற்குக் காரணம், திமுகவை மிகக் கடுமையாக பாரிவேந்தர் விமர்சித்து வருவதுதான்.

கல்வித்துறையில் மிகப் பெரிய அனுபவம் பெற்றவர் பாரிவேந்தர். அரசியலிலும் 13 ஆண்டுகள் மேலாக அனுபவம் உடையவர்.

ஆனால், அருண் அரசியலிலும் வயதிலும் இளையவர். களத்தில் ஓர் இளைஞரை எதிர்கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று பாரிவேந்தரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பாரிவேந்தர், "Life is not an Arithmetic. இரண்டும் இரண்டும் சேர்த்தால் நான்கு என்பது கிடையாது. It is depend upon that mindset and their health and their vision. இவைதான் ஒருவரின் பர்சனாலிடியை வடிவமைப்பது.

வயதில் முதியவர்கள் பலர் எவ்வளவோ சாதித்திருக்கிறார்கள். வயதில் குறைந்தவர்கள் பல இளம்வயதிலேயே கருகிப் போய் இருக்கிறார்கள். போதை, மதுவுக்கு அடிமையாகி ஒன்றுமில்லாமல் போய் இருக்கிறார்கள். ஆகவே வயது என்பது ஒரு பொருட்டே இல்லை.

Paarivendhar criticizes DMK freebies scheme

அடிப்படையிலேயே திமுகவின் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேரெதிரானவை. ஆகவே அடிப்படையிலேயே ஒத்து வராது. அதிமுக ஏறத்தாழ ஒத்த கொள்கையில் உள்ள கட்சி. ஆகவேதான், திமுகவைவிட அதிமுக நல்ல கட்சி என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், அதிமுக மோடியைத் தீவிரமாக எதிர்க்கவில்லை. திட்டங்களைச் செயல்படுத்த அதிமுக தடையாக இருந்ததும் இல்லை. அதிமுகவுக்கு ஓரளவு தேசிய பார்வை உள்ளது. எடப்பாடி தனது தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தேசிய பார்வை உள்ளது. அதை மறுப்பதற்கு இல்லை. அதிமுக, திமுக, பாஜக என்று வரும்போது எனக்கு முதல் இரண்டு கட்சிகளைவிட பாஜகவை அதிகம் பிடித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

அதைப் போன்று திமுக அரசுக் கல்விக்காகப் பல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. நிறைய நிதியைப் படிக்கும் பிள்ளைகளுக்கு வழங்கி வருகிறது. அது பற்றி உங்களுடைய பார்வை என்ன? என்ற கேள்விக்கும் பாரிவேந்தர் தனது தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசுகையில், "என்னுடைய வரிப்பணம். உங்களுடைய வரிப்பணம். திட்டம் போடுவதும் அதைச் செயல்படுத்துவதும் அரசினுடைய வேலை. நான் ஒரு ரூபாய் மக்களுக்காகச் செலவழித்தால், அதை என் உழைத்த பணத்திலிருந்து கொடுக்கிறேன்.

Paarivendhar criticizes DMK freebies scheme

அதற்கான உழைப்பைப் பல்கலைக்கழகத்தில் நான் போட்டுள்ளேன். அதன்மூலமாக ஒரு குறிப்பிட்ட நிதியை எடுத்து செலவு செய்கிறோம்.

ஆகவே நான் செய்வதும் திமுக செய்வதும் ஒன்றாகாது. நீங்கள் உங்கள் நிறுவனத்திலிருந்து எடுத்து செலவு செய்துவிட்டு, பிறகு சொல்லுங்கள். நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று விளாசி உள்ளார்.

திமுகவை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறீர்களே? கடந்த முறை அவர்களுடன்தானே கூட்டணி வைத்திருந்தீர்கள் என்று கேட்டால், "தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியுடன் மற்றொரு கட்சி தோழமைக் கொள்வது சகஜம்.

அதுபோலத்தான் நாங்கள் கூட்டணி வைத்தோம். கூட்டணி வைத்துவிட்டோம் என்பதற்காக யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அவரவர்களுக்கு சுயமான கொள்கை உள்ளது.

Paarivendhar criticizes DMK freebies scheme

பெரம்பலூர் தொகுதியில் திமுகவின் வாக்குகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அதைப்போல் வேறு தொகுதிகளில் எங்கள் கட்சியின் வாக்கு அவர்களுக்குப் போய் இருக்கிறது. அதற்குச் சான்றாக விழுந்துள்ள ஓட்டுகளைக் கணக்கு எடுத்துப் பார்த்தால், அந்த உண்மை உங்களுக்கே புரியும்.

அதற்காகத்தான் கூட்டணி வைக்கிறோம். தோழமை கொள்கிறோம். திமுகவுடனான தோழமை தேர்தலுடன் முடிந்து விட்டது. அவர்களின் எம்பிகள் மோடி எதிர்ப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இருந்தார்கள். அவர்களால் தமிழ்நாட்டுக்குப் பயன் இல்லை.

அதைப் புரிந்துகொண்டுதான் நாங்கள் விலகிவிட்டோம். இன்றைக்கு மக்கள் திமுகவை விரும்பவில்லை. ஊழல் அதிகரித்து விட்டது. அவர்களின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். ஆகவே, என்னை எதிர்த்துப் போட்டியிடுகின்றவர் திமுகவினருக்குப் பெரிதாக ஆதரவு இல்லை.

ஒரு விசயத்தை மிகத் தெளிவாக நினைவுபடுத்திவிடுகிறேன். திமுகவினர் வெற்றி பெற்றுச் சென்றாலும் தமிழ்நாட்டுக்குப் பலன் இல்லை. ஏனென்றால் மூன்றாவது முறையாக மோடி பதவியேற்பது என்பது முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது" என்கிறார் பாரிவேந்தர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+