எனக்கு யாரும் போட்டியில்லை! பாஜக Vs திமுக இடையேதான் போட்டி! பாரிவேந்தர் நச்!
சென்னை: எனக்கு யாருமே போட்டியில்லை என்று பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 25 இடத்தைப் பிடித்துள்ளது பெரம்பலூர் தொகுதி.

இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மொத்தம் 14,39,328. ஆண் வாக்காளர்கள் 6,97,993 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 7,41,204 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 131 பேர் உள்ளனர்.
2019இல் நடந்த பொதுத் தேர்தலில் பாரிவேந்தர் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் 6 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் என மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது.
அதற்குப் பிறகு இப்போது மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜக கூட்டணி சார்பாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து திமுக அமைச்சர் நேருவின் மகன் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதிகள் தங்கள் மாவட்டத்திற்கு என்று தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றும் சட்டக் கல்லூரி ஒன்று தேவை என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
'கல்வி வளர்ச்சிக்காக வைக்கப்படும் எந்தக் கோரிக்கையையும் நான் வரவேற்கிறேன். அதைச் செய்து முடிக்க ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்' என்று வாக்குறுதி அளிக்கிறார் பாரிவேந்தர்.
மேலும் அவர் கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தொகுதிக்காகச் செய்த திட்டங்கள் என்ன? அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளேன் என்பதை விளக்கி உள்ளார்.
கள நிலவரம் பற்றி பாரிவேந்தர் பேசுகையில், "ஊடகங்கள்தான் என்னை எதிர்த்துப் போட்டியிடுபவரை பலம் வாய்ந்தவர் என்றும் பலம் வாய்ந்த கட்சியைச் சார்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவே இல்லை.
ஏனென்றால், அவரைவிட அனுபவம் பெற்றவன் நான். கடந்த முறை என்னைத் தேர்ந்தெடுத்த இந்தத் தொகுதி மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களைச் செய்து கொடுத்த மனநிறைவோடு மீண்டும் போட்டியிடுகிறேன்.

ஒன்றும் செய்யாமல் வாக்குக் கேட்டு மக்களை நான் சந்திக்கவில்லை. என் தொகுதி நிதியோடு சேர்த்து சொந்த அறக்கட்டளை மூலம் பல நலத்திட்டங்களைச் செய்து கொடுத்துவிட்டு வந்து வாக்குக் கேட்கிறேன். அப்படி ஒரு வேட்பாளரை நீங்கள் திமுகவில் காட்ட முடியாது.
காமராஜர் காலத்திலிருந்து பெரம்பலூர் மக்களுக்கு ரயில் சேவை தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதைப் பற்றி எந்த எம்பியும் பேசவில்லை. நான் தான் அதைக் கையில் எடுத்துக் கூடிய மட்டும் என் சக்தியைச் செலவு செய்து போராடி முக்கால்வாசி வெற்றியைப் பெற்றுள்ளேன்.
கிட்டத்தட்ட 1000 கோடி திட்டம். அவ்வளவு பணத்தைச் செலவு செய்து ரயில் சேவையைக் கொண்டுவந்தால், அது நஷ்டமாகி விடுமோ என்று மத்திய அரசு தயங்கியது. அதைப் பற்றி விளக்கம் அளிப்பதற்காகப் பிரதமர் மோடியைப் பல முறை சந்தித்துப் பேசி இருக்கிறேன்.
சுதந்தரம் பெற்ற நாட்டில் ஒரு பகுதி மக்கள் ரயில் சேவை இல்லாமல் இருக்கிறார்கள். ஆகவே அதில் லாப நஷ்ட கணக்கை நாம் பார்க்கக் கூடாது. இப்படித் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தேன். ஒருமுறை அல்ல பலமுறை அழுத்தம் கொடுத்திருக்கிறேன்.
எனது நல்ல எண்ணத்தை மத்திய அரசு புரிந்துகொண்டது. உங்களுக்காக இதை நாங்கள் செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்தார் பிரதமர். அதன்படி மத்திய அரசு இணங்கியது.
இப்போது ரயில் சேவை தொடங்குவதற்காக சர்வே பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் சர்வே பணி முடிந்துவிடும்.
கடந்த முறை வேறு கூட்டணியில் நாங்கள் இருந்தோம். அப்போது எனக்கு இருந்த ஆதரவைவிட, இப்போது அதிக அளவில் மக்கள் ஆதரவு உள்ளதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.
அதிமுக இப்போது களத்தில் இல்லை. பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் இந்தத் தேர்தல் களத்தில் போட்டி நிலவுகிறது. அதுதான் உண்மை. அது நடந்து கொண்டுள்ளது.

அதை மக்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போகும் இடம் எல்லாம் பாஜக அலை வீசுகிறது" என்றவரிடம் மேலும் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்தத் தொகுதியின் தேவைகளைச் செய்து கொடுத்துள்ள ஒரு எம்பியாக உங்களுக்கு நீங்களே எத்தனை மதிப்பெண் போடுவீர்கள் என்று கேட்டதற்கு அவர், "நான் என்ன செய்திருக்கிறேன் என்பதில் ஒளிவுமறைவு இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராகக் கிடைத்த 17 கோடி ரூபாயை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன். ஒரு பைசா பாக்கி இல்லை.
அதைக் கடந்து என் அறக்கட்டளை மூலம் இந்தத் தொகுதிக்கு மொத்தம் 126 கோடிக்கு மேல் செலவு செய்திருக்கிறேன். 1200 மாணவர்களைப் படிக்க வைத்திருக்கிறேன்.
இதை எல்லாம் நான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீங்கள் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் 100/100 மதிப்பெண்களை எனக்கு நான் கொடுப்பேன். அந்தளவுக்கு நம்பிக்கை எனக்கு உள்ளது" என்கிறார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications