Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளின் வரப்பிரசாதம்.. பயிர் காப்பீடு திட்டம்.. செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயிர் காப்பீடு செய்ய மத்திய அரசால் காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், நாளையுடன் அவகாசம் முடிகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற வேண்டுமானால், விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோலவே, கடந்த நவம்பர் 15-ம் தேதி தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 Paddy Crop Insurance and Chengalpattu, Kancheepuram Collectors Big Announcement

தீபாவளி பண்டிகை: ஆனால், வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பதாலும், தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களாலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே, மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுக்கவும், இதையடுத்து, கால அவகாசத்தை வரும் 22-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இதற்கான சேவை மையங்கள் விவசாயிகளுக்கு ஏற்ப திறந்து இருக்கும் என்று தமிழக அரசும் உறுதி தந்துள்ளது.

நாளையே கடைசி: இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் அவசரமாக அருகே உள்ள இணைய சேவை மையங்கள் சென்று நாளைக்கும் சம்பா பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகளை கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நெல் - சம்பா, பயிருக்கு பயிர் காப்பீட்டு தொகையில், விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீடு கட்டணமாக, ஏக்கருக்கு 512.25 ரூபாய் செலுத்தினால் போதுமானது. விவசாயிகள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்யலாம்.

விதைப்பு சான்றிதழ்: இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, முன்மொழி விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்த வேண்டும்.

அதன்பிறகு, அதற்கான ரசீதையும், பொது சேவை மையங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது.

தேதி மாற்றம்: இந்த கூட்டம் வருகிற 29-ந்தேதி கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும். கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+