"பொன்னேட்டில் பெயர் பதித்த அஜித்".. பத்மபூஷண் விருதுபெற்ற நடிகர் அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு சார்பில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு நிலையில், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் கட்சியினர், நடிகர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அஜித்துக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைக்கச் சொல்லியிருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கின்றது. தற்போது நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடா முயற்சி, குட்பேட் அக்லி திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

chennai ajithkumar padma bhusan

ஏற்கனவே துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி மூன்றாவது இடம் பிடித்திருந்தது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அடுத்த குட் நியூஸாக அவருக்கு மத்திய அரசின் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உச்சகட்ட குஷி மோடிற்கு கொண்டு சென்றுள்ளது.

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, தொழில்துறை என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம பூஷண் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழில் மற்றும் வர்த்தக துறையில் நல்லி குப்புசாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து போட்டிகள் மிகுந்த திரைத்துறையில் உச்சத்தில் ஒரு இடம் பிடித்து, அரியதொரு போட்டியில் உலக வரைபடத்தில் தன் பெயரை பொன்னேட்டில் பதித்த நண்பர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமை கொள்கிறது.

நடனமும், நடிப்பும் அடையாளமாய் குடும்பத்தில் தோன்றி, அவ்வடையாளங்களை விளங்கிய இன்னும் ஆழப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பரதம் என்னும் கலையை பரீட்சித்து, புது வடிவம் கண்டெடுத்து, அதைப் பாரெங்கும் புகழ் மணக்க ஆடிப் பெருமை சேர்த்த சகோதரி ஷோபனாவுக்கு பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பேரானந்தம் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பத்மபூஷண் விருது பெற்ற அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான "பத்ம பூஷன்" விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+