பாலியல் தொல்லை.. மாணவிகளிடம் சீண்டல்.. சிக்கிய பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்.. அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது சென்னை போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

    Padma Seshadri Rajagopalan கைதானது எப்படி? பரபர பின்னணி | OneIndia Tamil

    பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாணவிகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இணையத்தில் முன்னாள், இந்நாள் மாணவிகள் பலர் இது தொடர்பாக புகார்களை அடுக்கி வருகிறார்கள். ஒவ்வொரு புகாரும் பதை பதைக்க வைக்கும் அளவிற்கு உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு தீவிரமாக விசாரித்து வருகின்றது.

    ஆசிரியர்

    ஆசிரியர்

    முக்கியமாக பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆன்லைன் கிளாஸ் நடக்கும் போது அரைநிர்வாணமாக வந்தது, மாணவிகளின் வாட்ஸ் ஆப்பில், படம் பார்க்க வரியா என்பது தொடங்கி பாலியல் ரீதியாக பல மெசேஜ்களை அனுப்புவது என்று இவர் மீது புகார்கள் அடுக்கப்படுகின்றன.

    ஸ்கிரீன் ஷாட்

    ஸ்கிரீன் ஷாட்

    மாணவிகளை வகுப்பு நடக்கும் போது தவறாக தொடுவது என்று அங்கு பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடுமையான பல புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவர் வீடியோ காலில் செய்த முறைகேடான விஷயங்கள் இன்று ஸ்கிரீன் ஷாட்டாக டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போலீசாரை இவரை பிடித்து இன்று மாலை விசாரித்தனர்.

    விசாரணை

    விசாரணை

    இவரின் லேப்டாப், போனை கைப்பற்றி விசாரித்தனர். ஆனாலும் இவர் அதில் இருந்த சாட்களை எல்லாம் அழித்துவிட்டார். அதே சமயம் இன்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த ராஜகோபாலன், இந்த பள்ளியில் கடந்த 5 வருடமாக தான் இப்படி பாலியல் சீண்டல்களை செய்ததாகவும், பள்ளியில் இதேபோல் பல இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

     கைது

    கைது

    இவரை கைது செய்ய முறையான ஆதாரங்களுக்காக காத்திருந்த நிலையில் போலீசார் சில நிமிடங்களுக்கு முன் ராஜகோபாலனை முறையாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். போஸ்கோ சட்டம், பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் இவரை கைது செய்துள்ளனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    நாளை

    நாளை

    இவரிடம் ஒரு பக்கம் விசாரணை நடக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடக்கும் என்கிறார்கள். பள்ளியில் இன்னும் சில கருப்பு ஆடுகள் இருப்பதாக இவர் கூறியுள்ளார். இதனால் நாளை இவர்களிடமும் விசாரணை நடக்கும் என்று கருதப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+