Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரியின் பொக்கிஷம்: 3000 ஆண்டு குறும்பர் ஓவிய கலையை காப்பாற்றிய கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக நீலகிரியைச் சேர்ந்த மறைந்த ஆர். கிருஷ்ணனும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. யார் இந்தக் கிருஷ்ணன்.. இவருக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நாட்டில் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்குப் பத்ம விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியில் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

padma shri 2026 Who is R Krishnan Unsung Hero from Tamil nadu Niligiri Who saved Kurumba art

பத்மஸ்ரீ விருதுகள்

அதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீலகிரியை சேர்ந்த மறைந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. யார் இந்தக் கிருஷ்ணன்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

யார் இந்த கிருஷ்ணன்

தமிழ்நாட்டின் நீலகிரி மலைத் தொடர்களில் வாழும் ஆலு குறும்பர் பழங்குடியின மக்களின் அடையாளமாக இருந்தவர் கிட்னா எனப்படும் ஆர். கிருஷ்ணன். சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான ஒரு தொன்மையான கலை வடிவத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்து, அதற்குப் புதிய உயிர் கொடுத்தவர் இந்த கிருஷ்ணன்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், ஆலு குறும்பர் சமூகத்தின் தனித்துவமான ஓவியப் பாணியைக் கடந்த 30 ஆண்டுகளாகத் தனி ஆளாகக் காப்பாற்றி வந்தார். இவர் சிறு வயதில் இருந்தபோது இந்தக் கலையைத் தனது தாத்தா மதனிடம் இருந்து கற்றுக் கொண்டார். இந்தக் கலை அழிவின் விளிம்பில் இருந்ததை உணர்ந்த கிருஷ்ணன், வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்ப்பணித்தார். பழங்குடியின கோவில்களின் சுவர்களில் வரையப்பட்டு வந்த இந்த ஓவியங்களை, நவீனக் காலத்திற்கு ஏற்ப கேன்வாஸ் (Canvas) தளத்திற்கு மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

எழுத்துப் பாறை

இவரது ஓவிய ஸ்டைல் "எழுத்துப் பாறை" எனப்படும் 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியக் கலையை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஓவியங்கள் மிகவும் எளிமையானவை, அதே சமயம் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவையாக இருக்கும். மேலும், கிருஷ்ணன் தனது ஓவியங்களுக்கு எப்போதும் ரசாயன வண்ணங்களைப் பயன்படுத்தியதே இல்லை. காடுகளில் கிடைக்கும் இலைகள், மரப்பட்டைகள் மற்றும் இயற்கை தாதுக்களில் இருந்து பெறப்படும் இயற்கை நிறமிகளை மட்டுமே பயன்படுத்தினார்.

இவரது ஓவியங்கள் ஆலு குறும்பர் மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, வன விலங்குகள், தாவரங்கள் மற்றும் அவர்களின் கலாச்சார விழாக்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றன.

விருது

தன் வாழ்நாள் முழுவதும் கலைப் பணியாற்றிய கிருஷ்ணன், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவையைப் பாராட்டி, இப்போது மத்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. சுமார் 41 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், ஆலு குறும்பர்களின் வாழ்வியலை ஆயிரக்கணக்கான ஓவியங்கள் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார். "எழுத்துப் பாறை" என்ற தொன்மையான கலையின் வாரிசாகத் திகழ்ந்த ஆர். கிருஷ்ணன் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவரது ஓவியங்கள் நிலைத்து நிற்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+