சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 என்பது வியாழக்கிழமையாகும். அதன்பிறகு ஏப்ரல் 4ம் தேதி (திங்கட்கிழமை)ரிசல்ட் வெளியாக உள்ளது. தேர்தல் நாளில் ஒவ்வொருவரும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை தினம் அறிவிக்கப்படும்.

paid holiday tamil nadu assembly election 2026 election commission

இருப்பினும் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்கள், தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதனால் அவர்கள் ஓட்டளிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், ''ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கப்பட வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+