பாகிஸ்தானில் செம தலைவர்கள் இருக்காங்க.. திடீரென சப்போர்டுக்கு வந்த டிரம்ப்.. இந்தியா மீது பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென பாகிஸ்தான் நாட்டு தலைவர்களை புகழ்ந்து பேச தொடங்கி உள்ளார்.

அதிபர் டிரம்ப் பலமுறை இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை தான் ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என்று கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரம்ப் மீண்டும் பேச்சு

இந்த நிலையில்தான் தற்போது மே மாதத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடந்த சண்டையின் போது, போர் நிறுத்தத்தை மேற்கொள்ள உதவியது தான்தான் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த வெளிநாட்டு உதவியும் நாங்கள் பெறவில்லை என்று இந்தியா அப்போது தெளிவாக தெரிவித்திருந்தது. தற்போது டிரம்ப், பாகிஸ்தான் தலைவர்களைப் புகழ்ந்து பேச தொடங்கி உள்ளார். அதோடு இந்த பெரிய போரை தடுத்ததற்கான அமெரிக்காவின்பங்கை இந்தியா மதிக்கவில்லை என்றும் டிரம்ப் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Pakistan has super leaders India is not appreciating USA says Donald Trump

பாகிஸ்தானைப் புகழ்ந்து, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்த டிரம்ப்:

டிரம்ப் பேசும்போது, "பாகிஸ்தானில் நல்ல தலைவர்கள் உள்ளனர். இதை நான் சொல்வது சிலருக்கு பிடிக்காது, ஆனால் அதுதான் உண்மை. பாகிஸ்தான் தலைவர்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. நான்தான் போரை நிறுத்தினேன்.. ஆனால் யாரும் எனக்கு பாராட்டுத் தெரிவிக்கவில்லை. இந்த பெரிய போரை தடுத்ததற்கான அமெரிக்காவின்பங்கை இந்தியா மதிக்கவில்லை," என்றார்.

முன்னதாக டிரம்ப் இதே விவகாரம் தொடர்பாக பேசுகையில், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்.

சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். அதை அவர்கள் செய்துவிட்டார்கள், என்று கூறி இருந்தார்.

இந்தியா என்ன சொன்னது?

டிரம்பின் கருத்தை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. மே 10 அன்று போர் நிறுத்தம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு தனிப்பட்ட வகையில் எடுக்கப்பட்டது . இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரல்களுக்கு இடையே மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது. பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ இந்திய டிஜிஎம்ஓவுக்கு அழைப்பு விடுத்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று இந்தியா கூறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+