24 மணி நேரம்தான் டைம்.. IMFல் கடன் கேட்டுவிட்டு.. இப்படி செய்யலாமா? பாகிஸ்தானுக்கு வசமான ஆப்பு?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த 24 மணி நேரத்தில் கடன் பெற பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக அந்நாட்டிற்கு கடன் கிடைக்காமல் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெறுவது வழக்கம். அடுத்த கட்ட கடன் இன்னும் 24 மணி நேரத்தில் வழங்கப்பட வேண்டிய நிலையில் பாகிஸ்தானின் அடாவடி செயல் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக அந்நாட்டிற்கு கடன் கிடைக்காமல் போகலாம் . சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.3 பில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் இது. இந்த நிதி தொகுப்பை மதிப்பாய்வு செய்து சாத்தியமான ஒப்புதல் அளிக்க, IMF நிர்வாகக் குழு மே 9, 2025 அன்று கூட உள்ளது. பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சர்வதேச நிதி ஆதரவைப் பெறுவதற்கான பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.

Pakistan plan to get funding from IMF may not happen as it attacks India

ஆனால் பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க கூடாது. பாகிஸ்தானுக்கு போர் செய்ய நிதி உள்ளது, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தர நிதி உள்ளது, அப்படிப்பட்ட நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் தரக்கூடாது என்று இந்தியா வாதம் வைக்க உள்ளது. இதற்காக இந்தியா சார்பாக நாணய நிதியத்துடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்கள் இருந்தபோதிலும், வாரியக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று IMF உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு அமைதியான தீர்வு ஏற்படும் என்றும் IMF நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் இன்று நிதியை ஒதுக்க ஒப்புக்கொள்வார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது.

பாகிஸ்தான் போர்

பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்னொரு பக்கம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அஜித் தோவல் உள்ளிட்டோருடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தான் தாக்குதலையடுத்து மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சியால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

அதேபோல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் சியால்கோட்டில் இந்தியா தாக்கி வருகிறது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+