Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லாவரம் வேல்ஸ் குழுமம் புகார்... ஈ.வி.பி பிலிம்சிட்டி சந்தோஷ் ரெட்டி கைது விவகாரத்தில் புதிய உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லாவரத்தில் செயல்படும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் சார்பில் சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில் கூறுகையில், "கடந்த 16.07.2025 அன்று சென்னையில் செயல்படும் சந்தோஷ் பிலிம் சிட்டி மற்றும் ஈ.வி.பி. பெருமாள் சாமி, பத்மாவதி கல்வி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி என்பவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

அதன்படி, சென்னையில் உள்ள 34.75 ஏக்கர் நிலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டிடங்கள், ஸ்டுடியோக்கள், கன்வென்ஷன் சென்டர், ஓட்டல் உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தம் செய்தோம். இதற்காக வேல்ஸ் குழும நிறுவனங்கள் சார்பில் ரூ.23 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்களின் கட்டிடங்கள் தொடர்பாக உரிய அனுமதிகள் பெறவில்லை என்பது மறைக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை வேல்ஸ் குழுமம் விசாரணையில் கண்டறிந்தது.

pallavaram vels Group complaint New facts emerge in arrest of EVP Film City owner Santosh Reddy

இது குறித்துக் கேட்டபோது, சந்தோஷ் ரெட்டி மற்றும் அவரது மேலாளர்கள் வினோத், கிரண்ராஜ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகார் மனு தொடர்பாகத் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டி மற்றும் அவரது மேலாளர்கள் வினோத், கிரண்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்துத் தாம்பரம் போலீஸ் கமிஷனரக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பெங்களூரைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு ஆடை வடிவமைப்பாளர் அளித்த புகாரிலும் சந்தோஷ் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் பின்னணி: சந்தோஷ் ரெட்டியின் மகளுக்கு திருமண ஆடை வடிவமைப்பதற்காக அந்தப் பெண் சந்தோஷ் ரெட்டியுடன் அறிமுகமானார்.

குற்றச்சாட்டு என்ன: சந்தோஷ் ரெட்டி தன்னை காதலிப்பதாகக் கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தபோது தன்னைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் புகார் அளித்திருந்தார்.

காவல்துறை நடவடிக்கை: இந்தப் புகாரின் அடிப்படையில் பெங்களூரு வ்யாலிகாவல் போலீசார் சந்தோஷ் ரெட்டி மீது பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+