Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமாயில் வாங்கறீங்களா? ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் வருது.. 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செம குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்சூழலில், பொதுமக்களின் நன்மைக்காக, தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறதாம்.. இதற்கான பணிகளும் ஆரம்பமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு, கடந்த மாதம் தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, 1,038 டன்னாக குறைத்திருந்தது.. இதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் கோதுமை வழங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டது.. இது தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலக்கத்தையும் தந்தது.. இதையடுத்து, தமிழக அரசு இந்த விஷயத்தை கையில் எடுத்தது.

Palm Oil and TN Government Huge Plan to provide free Pulses, Palm Oil for 2 months

"தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமை வழங்க வேண்டும்" என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.. அத்துடன், இதுதொடர்பாக, தமிழக அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் நேரிலும் பேசினார்கள்.. இதற்கு பிறகு, தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

முன்னுரிமை: இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "முன்னுரிமை கார்டுதாரர்கள் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ப கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இது, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தவறு சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கியதுபோலவே, மாத மாதம், 8,500 டன் கோதுமையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.

பண்டிகை சீசன்: இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது.. இதனால், நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவைப்படும், 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய உள்ளதாம்.. இதுபோலவே தமிழக அரசும் முனைப்பு காட்டிவருகிறது. தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

துவரம் பருப்பு: அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

எனினும், பண்டிகை காலம் என்பதால், உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் வந்தாலும், பண்டிகை காலங்களில் ரேஷன் கடைகளில் கூடுதலாக பொருட்களை வழங்குவதை தமிழக அரசு வருடந்தோறும் கடைப்பிடித்து வருகிறது.

2 மாதங்கள்: அந்தவகையில், அனைத்து கார்டுதாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கும், ரேஷனில் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.. அந்தவகையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+