மொத்தம் 44 தொகுதி.. ஸ்கெட்ச் போடும் பனங்காட்டு படை.. எங்கள் ஜாதியை "பாஜக பிரிக்க கூடாது"-ஹரி நாடார்
சென்னை: பனங்காட்டு படை கட்சி சார்பில் தமிழகத்தில் 44 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
பனங்காட்டு படை கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது கட்சியின், தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

44 தொகுதிகளில் போட்டி
முதலில் பேசினார் ஹரி நாடார். தமிழகத்தில் 44 தொகுதியிலும் கேரளாவில் 2 , புதுச்சேரியில் 5 தொகுதிகளில் பனங்காட்டு படை கட்சி போட்டியிடுகிறது. இதில் ஹரி நாடார் ஆகிய நான், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறேன். எங்கள் தேர்தல் அறிக்கை 2 நாட்களில் வெளியிடப்படும்

நாங்களே வந்துட்டோம்
தேர்தலில் எல்லா கட்சியும் சாதியின் அடிப்படையில் தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு சமுதாய மக்களை மறந்து விடுகின்றனர். இதனால் நாங்களே நேரடியாக தேர்தலில் இறங்கி உள்ளோம்.

ஜாதி மாறி திருமணம் கூடாது
பல்வேறு நாடார் அமைப்புகள் இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளோடு உடன்பட மாட்டோம். வெளிப்பார்வைக்கு ஆணவக் கொலையாய் தெரியும் எல்லாம் ஆணவக் கொலை அல்ல. ஜாதி விட்டு ஜாதி திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மதம் வேறு, ஜாதி ஒன்றுதான்
நாடார் இட ஒதுக்கீடு தொடர்பாக பின்நாட்களில் ஆலோசிப்போம். கடவுள் வேறாக இருந்தாலும் சமுதாயம் ஒன்றுதான். கிறிஸ்தவ நாடார்கள், இந்து நாடார்கள் என்று பாஜக அரசியல் லாபத்திற்காக பிரித்து பேசுகிறது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். நாங்குநேரி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை விட பனங்காட்டுப் படை வேட்பாளர் ஹரி நாடார் அதிக ஓட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications