Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் வீட்டில் வலம் வரும் பஞ்சவர்ண கிளிகள்... எத்தனை பேர் மனசை கொத்தப்போறாங்களோ

பிக்பாஸ் வீட்டில் ஒரு கிளி இருந்தாலே ஆர்மி ஆரம்பித்துவிடுவார்கள். இந்த சீசனில் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஐந்து கிளிகள் பறந்து கொண்டிருக்கின்றன யார் யார் மனதை கொத்தி பதம் பார்க்கப் போகிறதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் இப்போது பஞ்சவர்ண கிளிகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஒரு கிளி பறந்தாலே ரசிகர்கள் உருகுவார்கள். இந்த முறை அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன்
என கலர் கலராக பஞ்சவர்ண கிளிகளாக பறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பஞ்சவர்ண கிளிகளும் யார் யார் மனதை கொத்தப்போகிறார்களோ சமூக வலைத்தளங்களில் யார் யாருக்கு ஆர்மி ஆரம்பித்து ரத்தக்களறி ஆக்கப்போகிறார்களோ.

பிக்பாஸ் கமல்ஹாசன் யாரையும் கட்டிப்பிடிக்காமல் வீட்டிற்குள் அனுப்பி வைத்து நடக்கப்போகிற ஆட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

வீட்டிற்குள்ளும் கைகுலுக்காமல் டச்சிங் இல்லாமல் தனி மனித இடைவெளி கடைபிடிப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்க அப்படி எல்லாம் இல்லீங்கோ நாங்க எப்பவும் ஒரே மாதிரிதான் என்று சொல்லி கைகுலுக்கல், கட்டிப்பித்தல் என வீட்டிற்குள் கலகலப்பு ஆரம்பமாகிவிட்டது.

ஸ்மார்ட் பெண்கள்

ஸ்மார்ட் பெண்கள்

பிக்பாஸ் சீசன் வீட்டிற்கு இந்த முறை ரேகா, அறந்தாங்கி நிஷா,சம்யுக்தா தவிர அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன் ஆகிய ஐந்து பேரும் இளசுகளை கவருவதற்காகவே விருந்தினர்களாக வந்திருக்கின்றனர்.

கிளாமர் ராணிகள்

கிளாமர் ராணிகள்

ஸ்வீட்டில் எந்த ஸ்வீட் டேஸ்ட் அதிகம் என்று கேட்டால் என்ன சொல்வது ஒவ்வொரு ஸ்வீட்டிற்கு ஒரு தனி சுவை இருக்கிறது அது போல பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கிளாமர் ராணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அவரவர்களுக்கு என்று ரசிகர்கள் பட்டாளங்கள் சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள்.

அனிதா இனி இனிதா

அனிதா இனி இனிதா

அனிதா செய்தி வாசிக்கும் போதும் வணக்கம் தமிழகம் சொல்லும் போது பார்த்த ரசிகர்கள் இனி பிக்பாஸ் பார்க்க தூக்கத்தை தொலைக்கப்போகிறார்கள். அனிதா இனிமே இனிதாதான். இனிக்க இனிக்க பேசி யார் மனதை பிழியப்போகிறாரோ.

ஆளை காலி பண்ணும் ரம்யா

ஆளை காலி பண்ணும் ரம்யா

ஒரே ஒரு போட்டோ சூட் மொட்டை மாடியில் அமர்ந்து இடுப்பு மடிப்பு தெரிய போட்டு ஆளை காலி செய்தவர் ரம்யா பாண்டியன். அறிமுக நாளிலேயே இடுப்பு தெரிய நடனமாடி ரசிகர்களைஆல் அவுட் செய்து விட்டார். இப்போது படு கிளாமராகவே வலம் வருகிறார் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இனி ரம் அடித்தது போலவே பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

மனதை பிழியும் ஷிவானி

மனதை பிழியும் ஷிவானி

சீரியல் நாயகியாக இருந்தாலும் இவர் போடும் கவர்ச்சி போஸ்ட்களை பார்க்கவை இவரை பின்தொடர்கிறார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இன்னும் மிங்கிள் ஆகவில்லை. அப்படி ஆன பின்னர் சிங்கிள்ஸ் எல்லாம் இவருக்காகவே பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

கேப்ரில்லா என்ற பட்டர் ஸ்காட்ச்

கேப்ரில்லா என்ற பட்டர் ஸ்காட்ச்

கேப்ரில்லாவின் நடன அசைவும், ஆடை அலங்காரமும் பலரை உருக வைத்திருக்கிறது. கேப்ரில்லாவா பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமா என்று கேட்டால் கேப்ரில்லவே போதும் என்று ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சனம் ஷெட்டிக்கு ஓ ஓ சனம் என்று உற்சாக குரல் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.

 பஞ்சவர்ண கிளிகள் யாரை கொத்தப்போறாங்களோ

பஞ்சவர்ண கிளிகள் யாரை கொத்தப்போறாங்களோ

மொத்தத்தில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பறந்து கொண்டிருக்கும் அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன் என்ற பஞ்சவர்ண கிளிகள் ரசிகர்கள் மனதை கொத்த தயாராகி விட்டனர். இதில் பஞ்சராகப்போவது யார் யார் என்றுதான் தெரியவில்லை. நூறு நாளும் பிக்பாஸ் பார்க்கத்தானே போறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+