காரணமே வேற.. “நாய் 4 நாள் கழிச்சு குலைக்குது!” அதிமுக-பாஜக மோதல் ஏன்? ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி பரபர
சென்னை: அறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தவறான தகவல் என்றும், ஆனால் அதற்காக பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டணியை முறிக்கவில்லை என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். சட்டப்போராட்டம் ஒரு பக்கமும், மக்களை சந்திக்கும் புரட்சிப் பயணம் தொடரும். கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவெடுப்போம். ஏற்கனவே எடுத்த முடிவின் பாதையில் செல்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப்போகிறார்கள் எங்களுக்கு தெரியாது. அவர்கள் செல்லும் போக்கை பொருத்து முடிவுகளை எடுக்கப்போகிறோம்." என்றார். அப்போது அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து முன்வைத்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமசந்திரன், "அண்ணாமலை, அண்ணாவையும் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்தார். என்ன விமர்சனம் செய்தார்? அறிஞர் அண்ணா அவர்கள் 1956 ல் மதுரையில் பி.டி. ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பகுத்தறிவை பேசினார். அடுத்தநாள் முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஆன்மீக கருத்தை வலியுறுத்தி அண்ணாவை மறுதலித்து பேசினார்.
அடுத்த மதுரை தமுக்கம் மைதானத்திலே அண்ணாவின் பொதுக்கூட்டம். அதில் முத்துராமலிங்க தேவரை தாக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒரு மணி நேர உரையில் முத்துராமலிங்க தேவரை பற்றி அண்ணா பேசவே இல்லை. ஏனென்றால் பகையை வளர்க்க அறிஞர் அண்ணா விரும்பியதே இல்லை. ஆகவே, இதுதான் நடந்தது.

மறைந்த தலைவர்கள் பற்றி சொல்லும்போது சரியான தகவலை சொல்ல வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது. ஆனால், அதை உள்நோக்கத்தோடு சொன்னார் என்று சொல்ல நான் தயாரில்லை. இப்போது ஏற்பட்ட பிரச்சனை அறிஞர் அண்ணா அவர்களால் வந்தது அல்ல.
அண்ணா அவர்களை பற்றி விமர்சித்து 4 நாள் கழித்து பிரச்சனையை கிளப்புகிறார்கள். திருட்டு போய் 4 நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்ற நாயை வைத்துக்கொள்ள முடியுமா? என்ன விசயம் நடந்தது என்றால், அண்ணா அவர்களை பற்றி பேசிய பிறகு அண்ணாமலை வேறொரு தகவலை சொன்னார். 2026 தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாங்கள் பி டீம் அல்ல. சீ டீம் அல்ல. நாங்களே வருவோம். என்றார். அதுதான் பிரச்சனை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications